மேலும் அறிய

“இஸ்லாமியர்களுக்கு துரோகம், பாஜகவுடன் கள்ளக் கூட்டணி” அதிமுகவை விளாசிய அமைச்சர் நாசர்..!

இஸ்லாமியருக்கு பாதுகாவலாக இருப்பது அதிமுக மட்டுமே!?" என வாய்கிழிய பேசும் எடப்பாடி பழனிசாமியின் பொய் வேடம் கலைந்து போய் உண்மை முகம் இந்த விவகாரத்தில் வெளிப்பட்டு விட்டது - அமைச்சர் நாசர்

பாஜகவுடன் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாகவும், முஸ்லீம்களை அதிமுக பொய்ச் சொல்லி ஏமாற்றி வருகிறது என்றும் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கள்ளக் கூட்டணி எப்படி ? அறிக்கையில் இருக்கும் ஆதாரம் என்ன ?

அந்த அறிக்கையில், இஸ்லாமிய மக்களை அவதூறு செய்து பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியை பணி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட மறுத்து, இஸ்லாமிய மக்களுக்கு மீண்டும் துரோகத்தை செய்துள்ளது அதிமுக. இதன் மூலம் பாஜகவுடன் கள்ளக்கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தொடர்வது அம்பலமாகி உள்ளது என அமைச்சர் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணியை விளக்கிய அமைச்சர்

விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமாரை பணிநீக்கம் செய்யக்கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்துள்ளனர். "வெறுப்பு பேச்சு", "வகுப்பு வேற்றுமையை  தூண்டுதல்", அரசியலமைப்பை மீறுதல்" என்ற  3 குற்றச்சாட்டுகளை  உள்ளடக்கிய அந்த தீர்மானத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் நமது திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களான திரு. என்.ஆர்.இளங்கோ, திரு.கிரிராஜன், திரு.வில்சன், திரு.அப்துல்லா ஆகியோர் ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். 

அதிமுக எம்.பிக்கள் கையெழுத்து போடாதது ஏன்?

ஆனால் ,அதிமுகவை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இருந்தும் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்த தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திடவில்லை என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் நாசர், ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களின் உரிமைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் அவர்களுடன் தோளோடு தோள்நின்று ஆதரவாக செயல்பட்டு வரும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான் என்றும் மதப்பிரிவினைவாதிகளுடன் என்றும் கைகோர்க்க மாட்டோம் என அன்றுமுதல் இன்றுவரை நெஞ்சுரத்தோடு களமாடி வருபவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடிமை அதிமுக – ஆக்ரோஷமான நாசர்

ஆனால்  அடிமை அதிமுகவோ ஒருபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டு மறுபக்கம் பாஜகவின் கள்ள உறவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே CAA வை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்ட அடிமை அதிமுக, தற்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பது இப்போது உள்ளங்கை நெல்லிக்கனியாய் அம்பலமாகி உள்ளது என்று தன்னுடைய அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ள நாசர், "இஸ்லாமியர்கள்  கனிவு, சகிப்புத்தன்மை இல்லாத ஆபத்தானவர்கள்" என்று பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட சொற்களைப் பயன்படுத்தி பேசியிருந்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார்க்கு எதிராய் ஒரு கையெழுத்து போடக்கூட வக்கற்ற நிலையில் தான் அதிமுக உள்ளது.   என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பொய் வேடம் – நாசர் காட்டம்

"இஸ்லாமியருக்கு பாதுகாவலாக இருப்பது அதிமுக மட்டுமே!?" என வாய்கிழிய பேசும் எடப்பாடி பழனிசாமியின் பொய் வேடம் கலைந்து போய் உண்மை முகம் இந்த விவகாரத்தில் வெளிப்பட்டு விட்டது என்றும் இஸ்லாமிய மக்களது முதுகில் குத்துவதையே வாடிக்கையாக கொண்ட அடிமை அதிமுகவையும் அதன் தற்போதைய தளகர்த்தா பழனிச்சாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா EVKS  Elangovan: ஜெ. கலைஞரை அலறவிட்டவர் சிவாஜியின் சிஷ்யன்..! யார் இந்த EVKS இளங்கோவன்?Aadhav Arjuna interview | ”திருமாவ வரவிடாம பண்ணீட்டாங்க தடுத்ததே ஸ்டாலின் தான்”ஆதவ் அர்ஜுனா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
EVKS Elangovan: காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி? அப்பா, மகன் இருவருமே அடுத்தடுத்த ஆண்டில் மரணம்!
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
Aadhav Arjuna Interview : ”அழுத்தமா இல்லை ஆப்பமா?” நேர்காணலில் உளறிக்கொட்டிய ஆதவ் அர்ஜூனா..!
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் - காங்கிரஸ் தொண்டர்கள் சோகம்
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
லாரா, ரோகித் எல்லாம் ஓரம்போ! சிக்ஸர் அடிப்பதில் சிங்க நடைபோடும் பிரபல பவுலர் - யாருங்க அவரு?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan: பெரியாரின் பேரன்! ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் தொடங்கியது எப்படி?
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
EVKS Elangovan Passed Away: யாரைத்தான் எதிர்க்கவில்லை - கருணாநிதி, ஜெயலலிதாவையே அடித்து விளையாடிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
Breaking News LIVE: அருமை நண்பர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இறுதி மரியாதை - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
Breaking News LIVE: அருமை நண்பர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு இறுதி மரியாதை - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
Embed widget