ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது நாங்கள் வீண்பழி சுமத்தவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கடம்பூர் ராஜூ இன்று பிரச்சாரத்தில் பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாங்கள் சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை. ஜெயலலிதாவுக்கு இயற்கையாகவே உடல்நிலை சரியில்லை. 78 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார. இது ஊரறிந்த உண்மை.

அப்போது முதல்வராக இருந்தது ஓ.பி.எஸ். தான். பல்வேறு விமர்சனங்கள் வந்ததால், வெளிப்படை தன்மை வேண்டும் என்பதற்காக தான் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம். முதல்வரோ, அமைச்சர்களோ, கட்சியினரோ இதுவரை யார் மீதும் வீண்பழி சுமத்தவில்லை. ஜெயலலிதாவுடன் சசிகலா ஒன்றாக இருந்து பார்த்துக்கொண்டார் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. அதை தான் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது வீண்பழி சுமத்தவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

எங்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு கூறினால் தான் கவலைப்பட வேண்டும். ஸ்டாலின் எங்களுக்கு பாராட்டு பத்திரமா வழங்குவார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை அமைக்க முதல்வர் கையெழுத்திட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தது அவர்கள் தான். அங்கு ஒரு அசம்பாவிதம் நடந்தது. எதிர்பாராதவிதமாக தூண்டிவிடப்பட்டு மக்கள் வம்பாக பலியானார்கள். அது விரும்பதாகாத சம்பவம். அதற்கு என்ன நிவாரணமோ அதனை அரசு செய்தது. உடனடியாக அந்த ஆலையை அ.தி.மு.க. அரசு மூடியது.

ஸ்டாலினின் சொத்து மதிப்பு என்ன காட்டியுள்ளார். அவர் என்ன தொழில் செய்கிறார்? இவ்வளவு சொத்து மதிப்பு காட்டியுள்ளார். கோவில்பட்டியை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதை முதல்வரிடம் வலியுறுத்துவேன். இதனை நாளை இங்கு நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் அவர் அறிவிப்பார். ஒவ்வொரு தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர் தான் தமிழக முதல்வர். இவ்வாறு அவர் பேசினார்.

Tags: 2021 admk sasikala eps Election OPS jayalalitha death kadamboor raju arumugasamy commission

தொடர்புடைய செய்திகள்

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக  தீர்மானம்..!

டாப் நியூஸ்

BREAKING: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கு முடக்கம்!

BREAKING: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வங்கி கணக்கு முடக்கம்!

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!