‛உதயநிதி கையில் இருந்த திமுக வெற்றி...’ ஐ.பி.செந்தில்குமார் பேச்சு!
உதயநிதி ஸ்டாலின் ராசியானவர் என எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுகவின் இளைஞரணி செயலாளராகவும், சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். அவரை தற்போது கட்சியினர் அனைவரும் ஏகத்துக்கு புகழ்ந்துவருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கென ஒரு ஆதரவாளர் கூட்டம் இயங்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் உதயநிதி பிறந்தநாள் வந்தபோதுகூட காமன் டிபி வைத்து அதகளம் செய்தனர் உதய் ஆதரவாளர்கள்.
நேற்று முன் தினம் ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுக்கொண்ட திமுகவைச் சேர்ந்த ராஜேஷ்குமார் வெல்க அண்ணன் உதயநிதி என நாடாளுமன்றத்தில் கூறினார். அவரது பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. அதேசமயம், உதயநிதியை கட்சியினர் புகழ்வதை குறைத்துக்கொள்ள வேண்டுமெனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், பழனியில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் பழனி நகர உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்றம் செயலாளர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்போது பேசிய ஐ.பி. செந்தில்குமார், “உதயநிதி ஸ்டாலின் மிகவும் ராசியானவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற அடித்தளம் அமைத்தார். அதே போல சட்டமன்ற தேர்தலின் போதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்கு உதயநிதி ஸ்டாலினின் சூறாவளி பிரச்சாரம் காரணமாக அமைந்தது. உதயநிதி ஸ்டாலின் கையிலெடுத்த முதல் எய்ம்ஸ் செங்கல் திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: IT Raids Saravana Store: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரிசோதனை.. பல குழுக்களாக பிரிந்து ரெய்டு!
வழிகாட்டு குழு கலைப்பு... சசிகலா மீது சட்ட நடவடிக்கை... அதிமுக செயற்குழு தீர்மானம் ரெடி!