ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலை உயர்வு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
பால் விலை உயர்விற்கு காரணம் ஏன் என்பதனை வெளிப்படையாக கூற வேண்டும், அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
இந்தி திணிப்பு , ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டும் திமுக தங்களது தோல்வியை மறைக்க எடுத்து இருக்ககூடிய கேடயம் என்று கிருஷ்ணசாமி கூறினார்.
இந்தி திணிப்பு, ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டும் திமுக தங்களது தோல்வியை மறைக்க எடுத்து இருக்ககூடிய கேடயம் என்றும், இந்தி திணிக்கப்படுவதாக திமுக கற்பனையை உருவாக்குவதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் மின் கட்டண உயர்வினை கண்டித்தும், மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தேர்தலுக்கு முன் திமுக மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கீடப்படும் என்று கூறிவிட்டு அதனை செயல்படுத்தமால் தற்போது மின்கட்டணத்தினை பன்டமங்கு உயர்த்தியுள்ளது.
மின் கட்டணத்தினை உயர்த்த மத்தியரசு அழுத்தம் தான் காரணம் என்று கூறும் தமிழக அரசு நீட் தேர்வினை எதிர்கிறார்கள். மத்தியரசு என்ன அழுத்தம் கொடுத்தாலும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா?. சொத்தை காரணத்தினை தமிழக அரசு கூறக்கூடாது. மத்தி அரசு உயர்த்த சொல்லவில்லை, மாற்றங்களை தான் செய்ய கூறியுள்ளது. ஜி.எஸ்.டி வந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்பொழுது பால் விலை உயர்வுக்கு அதனை காரணம் காட்டுவது எப்படி ? அங்கேயும் ஊழல் தான். ஆவினில் நடக்கும் ஊழலை மறைக்கவே பால் விலையை உயர்த்துகின்றனர்.
பால் விலை உயர்விற்கு காரணம் ஏன் என்பதனை வெளிப்படையாக கூற வேண்டும். அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு உள்ளிட்ட எந்த பிரச்னையிலும் திமுக அரசு சரியாக செயல்படவில்லை. ஒன்று கடந்த ஆட்சி மீது அல்லது மத்திய அரசு மீது பழியை சுமத்துகின்றனர். திமுக அரசு நாளுக்கு நாள் தோற்று கொண்டு இருக்கிறது. எதிலும் எந்த கட்டுப்பாடு இல்லை. திமுகவை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை சரிவார நடத்தமுடியவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஏதாவது சாக்குபோக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தி எங்கு வருகிறது, எங்கு திணக்கப்படுகிறது என்று தெரியவில்லை. திணிக்கப்படுவதாக ஒரு கற்பனையை உருவாக்குகிறன்றனர். இந்தி திணிப்பு , ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டும் திமுக தங்களது தோல்வியை மறைக்க எடுத்து இருக்ககூடிய கேடயம்” என்றார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்