மேலும் அறிய

Durai Vaiko : “திமுகவிற்கும் மதிமுகவிற்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி” கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்..!

MDMK : "கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரிடமும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடனும், நல்ல நட்போடும் புரிதலோடுமே துரை வைகோ பயணித்து வருகிறார்"

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி என அறிவிக்கப்பட்டதிலிருந்து திமுகவிற்கு மதிமுகவிற்கும் இடையே அனுதினமும் பிரச்னை இருப்பதாக சிலர் கிளப்பிவிட, தீப்பெட்டியில் உராயும் தீக்குச்சிப்போல் தகித்து கிடக்கிறார்கள் மதிமுக தொண்டர்கள்.

வைகோவுடன் - துரை வைகோ
வைகோவுடன் - துரை வைகோ

ஆதங்கமும் கண்ணீரும்

திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்று ஆதங்கமாக பேசி அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் முன்னிலையிலேயே கண்ணீர் வடித்தார் துரை வைகோ. அன்றிலிருந்து துரை வைகோவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி, திமுக அழுத்தம் கொடுக்கிறது, அவருக்கு திமுக நிர்வாகிகள் யாரும் திருச்சியில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பது மாதிரியான செய்திகள் உலா வரத் தொடங்கின. ஒரு கட்டத்தில், துரை வைகோவிற்கும் திமுகவிற்கும் இடையே நெருடல் ஏற்பட்டுள்ளது என்று கூட தகவல்கள் கச்சைக் கட்டி பறந்தன.

அமைச்சர் நேருவுடன் துரை வைகோ
அமைச்சர் நேருவுடன் துரை வைகோ

”துரை வைகோவிற்கு எதிராக சதி - கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்”

மதிமுகவிற்கும் பம்பரம் சின்னம் கிடைக்காமல் தீப்பெட்டி சின்னம் கிடைத்த நிலையில், துரை வைகோ வெற்றியே திருச்சியில் கேள்விகுறியாகும் என்பதுபோல் சிலர் கிளப்பிவிட, திமுகவினரே சற்று அதிர்ந்துதான் போயினர். ஆனால், துரை வைகோவின் அணுகுமுறையால் திருச்சியில் அப்படி எந்த பிரச்னையும் எழவில்லை. கே.என்.நேரு அவரை சரியாக நடத்தவில்லை என்று சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தாலும் அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பும் தொடர்பும் கட்சியை தாண்டியது என்பது அவர்கள் இருவருமே நன்றாக அறிவர். அதனால்தான், தேர்தல் வேலைகள் திருச்சியில் சுனக்கம் இன்றி நடந்தது.Durai Vaiko :  “திமுகவிற்கும் மதிமுகவிற்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி” கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்..!

”தலைமைக்கு போன் மேல் போன் போட்ட தொண்டர்கள் - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மதிமுக”

ஆனால், திருச்சி பிரச்னையை தலைநகர் சென்னை வரை சிலர் கடத்தி வந்து மதிமுக தலைமைக்கும் திமுக தலைமைக்கும் இடையே பெரிய பிரச்னை வெடித்துள்ளது, தேர்தலுக்கு பிறகு இரண்டு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் பிளவு ஏற்பட போகிறது என்ற ரேஞ்சுக்கு செய்திகளை கசியவிட்டார்கள். ஒவ்வொருநாளும், சில நாளேடுகள் கூட மதிமுகவிற்கும் திமுகவிற்கும் இடையே இருக்கும் பிரச்னை பூதாகரமாகிவருகிறது என்பது போன்ற செய்திகளை வெளியிட, மதிமுக தொண்டர்களோ இது உண்மையாக இருக்குமோ என நினைத்து தலைமைக்கு போன் மேல் போன் போடத் தொடங்கினர்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. திமுகவிற்கும் – மதிமுகவிற்கு இடையே உறவு சுமூகமாகதான் இருக்கிறது என அவர்கள் விளக்கமளித்த பின்னர், இப்படியான வதந்திகளை பரப்புவோர் மீது தொண்டர்களின் கோபம் திரும்பியுள்ளது என்கிறார்கள் மதிமுக நிர்வாகிகள்.Durai Vaiko :  “திமுகவிற்கும் மதிமுகவிற்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி” கொந்தளிக்கும் மதிமுக தொண்டர்கள்..!

”மதிமுகவின் எதிர்காலமான துரை வைகோ”

இனி மதிமுகவின் எதிர்காலம் துரை வைகோதான் என்று ஆகிவிட்ட நிலையில், அவரின் வளர்ச்சியை பிடிக்காதவர்களும், அவரின் செயல்பாடுகளால் கட்சி புது தெம்பை பெற்றுவிடுமோ என்று அஞ்சுபவர்களும் இதுபோன்ற வேலைகளை பார்ப்பதாக மதிமுக தலைமை நினைக்கிறது. இதில் இன்னும் சொல்ல வேண்டுமானால், மதிமுகவில் இருந்து வெளியேறிய சிலரே இதுபோன்ற அவதூறுகளை கட்சியை நோக்கி வீசுவதுதான் மதிமுக தலைமைக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுகவோடு மதிமுகவை வைகோ இணைக்கப் போகிறார் என்ற புரளி சில மாதங்களுக்கு முன்னர் பரப்பப்பட்டது. இப்போது பாஜகவோடு மதிமுக தலைமை நெருக்கத்தை ஏற்படுத்த நினைக்கிறது என்ற புதிய வகையில் ஒரு உருட்டை மதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள் என மதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூறி, அவர்களுக்கு எதிரான கொதி மனநிலையில் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரிடமும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுடனும், நல்ல நட்போடும் புரிதலோடுமே துரை வைகோ பயணித்து வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget