மேலும் அறிய

முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்

"ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்ததை திரும்பப் பெறக் கோரி மயிலாடுதுறை எம்.பி சுதா குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு மனு அனுப்பியுள்ளார். 

மயிலாடுதுறை: முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்த ஏ.ஜி. பேரறிவாளன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளதற்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இந்திய இறையாண்மைக்கு சவக்குழி தோண்டும் முயற்சி என்றும், நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

வரலாற்றுத் துரோகம்

"பாரத ரத்னா" விருது பெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை, உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ (LTTE) தீவிரவாத அமைப்பின் மூலம் சதித் திட்டம் தீட்டி படுகொலை செய்த வழக்கில் ஏ.ஜி. பேரறிவாளன் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர். 31 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை தண்டனை அனுபவித்த அவர், 2022-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது என்பது அவர் நிரபராதி என்பதற்காக அல்ல; மாறாக, அவரது கருணை மனு மீது முடிவெடுக்க மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய காலதாமதத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது.

அத்தகைய நபர், இன்று சட்டத்தைக் காக்கும் வழக்கறிஞர் பணியில் தன்னை இணைத்துக் கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத முரண். நாட்டின் பிரதமரையும், அவருடன் இணைந்து 16 அப்பாவி உயிர்களையும் காவு வாங்கிய ஒருவருக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவது என்பது இந்திய நீதி வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாகும்.

அதிகாரப் பரவலாக்கின் நாயகன் படுகொலை

இந்தியாவை வல்லரசுப் பாதையில் நடைபோடச் செய்த தொழில்நுட்ப நாயகன் ராஜீவ் காந்தி. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் மூலம் 15 லட்சம் உள்ளாட்சிப் பதவிகளை உருவாக்கி, அதிகாரத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர். அத்தகைய பெரும் தலைவரைப் படுகொலை செய்த சதியில் பங்கெடுத்த ஒருவரை, "வழக்கறிஞர்" என்று அழைப்பது அந்தப் புனிதமான தொழிலுக்கே இழுக்காகும்.

வ.உ.சிதம்பரனார் போன்ற தேசபக்த வழக்கறிஞர்கள் வாழ்ந்த இந்தப் பெருமைமிக்க வழக்கறிஞர் சமூகத்தில், நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைத்தவர் அங்கீகரிக்கப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும்? படுகொலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்றும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் நீதிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில், தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு இத்தகைய வாய்ப்பு வழங்கப்படுவது நீதி தேவதையின் கண்களில் துகள்களைத் தூவும் செயலாகும்.

எதிர்காலத் தலைமுறைக்குத் தவறான முன்னுதாரணம்

இத்தகைய நடவடிக்கைகள் எதிர்காலத் தலைமுறையினரிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றாலும், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் மேலோங்கினால், அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இது களையப்பட வேண்டிய அடிவேர்.

நிர்வாகங்களுக்குக் கோரிக்கை மனு

பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவைத் திரும்பப் பெறக் கோரி, இந்திய இறையாண்மையைக் காக்கும் பொருட்டு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள் பல்வேறு தரப்பினருக்குக் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளார்.

* இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்

* இந்திய உள்துறை அமைச்சகம்

* மத்திய மற்றும் மாநில சட்ட அமைச்சர்கள்

* இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில்

* தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலகம்

நீதிக்கானப் போராட்டம்

"இந்தக் கருப்பு தினத்தை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. நீதித்துறைக்கு ஏற்படும் இந்தக் களங்கத்தை எதிர்த்து நாம் ஒன்றிணைய வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். பயங்கரவாதத்திற்குத் துணை நின்றவர்களுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைப்பதை எதிர்த்துத் தொடர்ந்து போராடுவோம்," என்று சுதா எம்.பி தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலிலும், வழக்கறிஞர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Resto-Bar : உணவகங்களில் குடிப்பகமா? தவெகஅரசுக்கு பா.ம.க. பகிரங்க எச்சரிக்கை!
Resto-Bar : உணவகங்களில் குடிப்பகமா? தவெகஅரசுக்கு பா.ம.க. பகிரங்க எச்சரிக்கை!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!
நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget