மேலும் அறிய

எடப்பாடி பழனிசாமியிடம் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம் - மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி !

நாங்கள் யாரையும் கஷ்டப்பட்டு கூட்டணியில் சேர்க்கவில்லை. ஒவ்வொரு எம்.ஜி.ஆர் தொண்டனும் திமுகவை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளார்கள். - நயினார் நாகேந்திரன் பேட்டி.

எடப்பாடி பழனிசாமியிடம் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம்: நயினார் நாகேந்திரன் பேட்டி.

நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
 
மதுரையில் மார்ச் 1 அன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பிரச்சார கூட்டம் தொடர்பாக மதுரை மஸ்தான்பட்டியில் தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில்,
"மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. தற்போது மாநாட்டில் மட்டும் பிரதமர் கலந்து கொள்வதாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை முடிந்தால் அதையும் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கௌரவ விரிவுரையாளர்களுக்கு நல்லது செய்வோம் என தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், ஆனால் செய்யவில்லை. தூய்மை பணியாளர்களை போராட வைத்து அடித்து தெருவில் நிறுத்தி தற்போது சாப்பாடு போடுகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களிடம் தற்போது முதலமைச்சர் பேசி எப்படியாவது அடித்து பிடித்து கூட்டணி மந்திரி சபை இல்லாமலே நான் முதலமைச்சராகி உங்களுக்கு நல்லது செய்கிறேன் என சமாளித்து வருகிறார்" என்றார்.
 
திமுக -  காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது தெரிகிறது
 
ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, "கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கு ஏதாவது காரணம் காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படுகிறது. எதற்காக டெல்லி சென்று கனிமொழி ராகுல் காந்தியை பார்க்க வேண்டும். எதற்காக கூட்டணி ஆட்சி ஒத்து வராது என முதல்வர் பேச வேண்டும். எதற்காக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் 2006 தேர்தல் பற்றி பேச வேண்டும். எல்லாம் பார்க்கும்போது திமுக -  காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் உள்ளது தெரிகிறது. நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம் தேசிய ஜனநாயக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் எதுவும் கேட்க மாட்டோம். நாங்கள் கேட்கவில்லை, அவர்கள் மாட்டேன் என சொல்லவுமில்லை" என்றார் 
 
தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,
"தேமுதிகவிடம் நாங்கள் இதுவரை கூட்டணி பேசவில்லை" என்றார்
 
சசிகலா புதிய கட்சி தொடங்குவதால் அதிமுக ஓட்டுக்களை பிரிப்பாரா என்ற கேள்விக்கு
"நாங்கள் யாரையும் கஷ்டப்பட்டு கூட்டணியில் சேர்க்கவில்லை. ஒவ்வொரு எம்ஜிஆர் தொண்டனும் திமுகவை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. பல மாற்றங்கள் வரும்" என்றார்

தலைப்பு செய்திகள்

Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
முதல்வர் விஜய் அமல்படுத்திய போட்டி டெண்டர் முறை... ஒரே டெண்டரில் ரூ.9 லட்சம் மிச்சப்படுத்திய சென்னை மாநகராட்சி!
WRD Department : ’திமுக ஆட்சியில் நீர்வளத்துறையிலும் Party Fund?’ தீவிர விசாரணை ; சிக்கும் அதிகாரிகள்!
’நீர்வளத்துறையிலும் Party Fund’ தீவிர விசாரணை ; சிக்கும் அதிகாரிகள்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget