மேலும் அறிய
செல்லூர் ராஜூ ஆவேசம்! பத்திரிகையாளரை வார்த்தையை அளந்து பேசச் சொன்னது ஏன்?
ஒரு தலைவரைப் பற்றி தரக் குறைவாக பேசுவது தவறு, பாவம் என்பதெல்லாம் சொல்லக்கூடாது. வார்த்தையை அளந்து பேச வேண்டும். - கடுப்பான செல்லூர் ராஜூ.

செல்லூர் ராஜூ
Source : whats app
வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்று செய்தியாளரை பார்த்து கோபமாக தெரிவித்தார். பின்னர் சில கேள்விக்கு பதில் அளிக்காமல் பாதியில் கிளம்பினார்.
செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடி பகுதியில் நியாய விலைக் கடை, ஆழ்துளை போர்வெல், சி.சி.டி.வி., கேமரா, புதிய மாமன்ற அலுவலகம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என மொத்தம் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ பேசுகையில்..,” மேற்கு சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து விளாங்குடி காமாட்சி நகர் பகுதியில் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நியாய விலை கடை, 5 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு போர்வெல் அமைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. சுமார் ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கட்டிடம் திறக்கப்பட்டது. ரூ.10 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் - பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்த கேள்விக்கு
கூட்டணி என்பது இறுதி கட்டத்தில் தான் முடிவாகும். கூட்டணி என்பது வாக்குகள் சிதறாமல், வாக்குகளை ஒன்றுபடுத்தி, சரியாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவோம். கடந்த ஏழாம் தேதி எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற தாரக மந்திரமாக பல மாவட்டங்களில் மக்களை சந்தித்து வருகிறார். இதற்கு மக்கள் பெரிய ஆதரவு தருகிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவது திட்டமான ஒன்று. சிக்கலான சூழ்நிலையில் கூட நல்ல ஆட்சி தந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி தருவார் என்று மக்கள் நம்புகிறார்கள். தற்போது பாஜக கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகள் எல்லாம் பேசி கொண்டிருக்கிறார்கள். எதிர்பாக்காதெல்லாம் நடக்கும். வருகிற தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும்.
தேர்தல் நேரத்தில் சீட்டு பேரம் இருக்கும், எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும், எந்த தேர்தல் கட்டத்திலும் கடைசி நேரத்தில் பிரியலாம். ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை எத்தனை தடவை பார்த்தாலும் அது அவருடைய கொள்கை.
ஓபிஎஸ் அவர்களை ஒதுக்கி வைத்தது பாவம் இல்லையா என்ற கேள்விக்கு
இந்த கேள்விக்கு சட்டுனு கோவமான செல்லூர் ராஜூ, ஒரு தலைவரைப் பற்றி தரக்குறைவாக பேசுவது தவறு. பாவம் என்பதெல்லாம் சொல்லக்கூடாது, வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்று செய்தியாளரை பார்த்து கோபமாக தெரிவித்தார். பின்னர் சில கேள்விக்கு பதில் அளிக்காமல் பாதியில் கிளம்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















