மேலும் அறிய
சிவகங்கை தமிழ்ச் செம்மல் விருது 2025: உங்கள் தமிழ்ப் பணியைப் பெருமைப்படுத்த ஒரு வாய்ப்பு, விண்ணப்பிக்கும் விவரம் !
சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகின்ற 25.8.2025ஆம் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்திடல் வேண்டும்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
2025-ஆம் ஆண்டிற்கு தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை, மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றனர்.
தமிழ்ச்செம்மல் விருது
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு ஆர்வலரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு "தமிழ்ச்செம்மல்" விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அதன்படி, "தமிழ்ச்செம்மல்" ரூ.25,000- பரிசுத்தொகை மற்றும் விருதாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி
அவ்வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல்" விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மேலும், விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் www.tamilvalarchithurai.tn. gov.in என்ற வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் விண்ணப்பப்படிவங்கள்" என்ற தலைப்பின்கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தகுதிகள் என்ன
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, இயற்றிய நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் இரு படிகள் இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்கப் பணிகள், தமிழறிஞர்கள் மாவட்டத்தில் இருவரின் பரிந்துரைக்கடிதம், செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம், வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை ஒளிப்படி, குடும்ப அட்டை ஒளிப்படி மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகின்ற 25.8.2025ஆம் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்திடல் வேண்டும்.
தொடர்பு எண்
மேலும், விண்ணப்பம் மற்றும் தமிழ்ச்செம்மல் விருது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04575-241487 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்” என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















