மேலும் அறிய

மநீம-வில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனுஷா ரவி - அதிர்ச்சியில் கமல்

மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாததால், அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து பரப்புரை பிரிவு மாநில செயலாளர் அனுஷா ரவி விலகியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தல் தோல்விகளுக்கு பிறகு தி.மு.க.வுடன் நெருக்கம் காட்டி வந்தது. இதனால், மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தி.மு.க., மக்கள் நீதி மய்யம் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில் நடப்பு மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், மக்கள் நீதிமய்யத்திற்கு மக்களவைத் தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் அதிருப்தி

இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் இன்று கலந்து பேசியதில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்வதெனவும், வரும் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதிமய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்த்த அந்த கட்சி தொண்டர்களுக்கும், கமல்ஹாசனின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறியதாவது, மக்கள் நீதிமய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும், மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும் கூறினார்.

அனுஷா ரவி விலகல்

மிகுந்த மனவருத்தத்துடன் இப்பதிவிடுகிறேன் @maiamofficial @ikamalhaasan 🙏என்னுடன் பயணித்த மய்ய உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏 pic.twitter.com/zCPvQ96MXU

— Anusha Ravi (@DrAnusharavi) March 16, 2024

">

கோவையை சேர்ந்த பார்க் கல்வி குழுமங்கள் உரிமையாளரும், தொழிலதிபருமான அனுஷா ரவி மக்கள் நீதி மய்யம் கட்சியில் பரப்புரை பிரிவு மாநில செயலாளராக அனுஷா ரவி இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இவர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இவரது கல்லூரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றார். கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடாததால் அனுஷா ரவி அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அக்கட்சியில் இருந்து அனுஷா ரவி விலகியுள்ளார்.

பா.ஜ.க.வில் இணைந்தார் அனுஷா ரவி:

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் ம.நீ.ம. உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.

மநீம-வில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அனுஷா ரவி - அதிர்ச்சியில் கமல்

இருப்பினும், தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால், அக்கட்சியின் தலைவரும், உறுப்பினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மநீமவில் இருந்து விலகிய அனுஷா ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget