மேலும் அறிய
Advertisement
’’அமைச்சர் MRK பன்னீர்செல்வத்தின் தலை துண்டிக்கப்படும்’’ - முகநூலில் மிரட்டல் விடுத்த உடன்பிறப்பு கைது
மாவட்டக் கழகத்தை வீணாக்கிய சாதி வெறி பிடித்த எம்ஆர்கே பி அவர்களின் தலை துண்டிக்கப்படும் என முரளி கிருஷ்ணன் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்புற உள்ளது தேர்தல் நடைபெற்றது. அதில் கடலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், பாஜக மற்றும் பாமக தலா 1 இடங்களிலும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். பின்னர் கடலூர் மாநகராட்சியில் 27 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது, பின்னர் திமுக சார்பில் கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயர் வேட்பாளராக கடலூர் திமுக நகர செயலாரின் மனைவி சுந்தரி அறிவிக்கப்பட்டார். ஆனால் மேயர் தேர்தல் அன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக திமுகவின் கடலூர் மாவட்ட பொருளாளர் மனைவி கீதா குணசேகரன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இருப்பினும் நடந்து முடிந்த மேயர் தேர்தலில் சுந்தரி வெற்றி பெற்று கடலூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்னதாக மேயர் தேர்தலுக்கு முந்தைய நாளில் கடலூர் மாநகராட்சியின் திமுக கவுன்சிலர்கள் திடீரென மாயமானார்கள். அதில் 7 கவுன்சிலர்களால் மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் உருவானது. இந்த நிலையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐய்யப்பன்தான் மேயர் தேர்தலில் நடந்த குழப்பத்திற்கு காரணம் எனவும், தலைமையின் அறிவிப்பை மீறி தனிச்சையாக செயல்பட்டார் என காரணம் கூறி திமுகவின் தலைமை கழகம் கடந்த சில நாட்களுக்கு முன் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக கூறி அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரியின் கணவரும் கடலூர் நகர தி.மு.க. செயலாளரும் ஆன கே.எஸ்.ராஜா நேற்று கடலூர் புதுநகர் காவல் துறையினரிடம் புகார் செய்தார். அதில், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பற்றி கடலூர் எஸ்.என்.சாவடி டி.எஸ்.ஆர். நகரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (51) என்பவர் முக நூலில் அவதூறாக பதிவிட்டு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் இந்த நிலையில் முகநூலில் மாவட்டக் கழகத்தை வீணாக்கிய சாதி வெறி பிடித்த எம்ஆர்கே பி அவர்களின் தலை துண்டிக்கப்படும் எனவும் எம்ஆர்கே அழிவின் ஆட்டம் ஆரம்பம் எனவும் அவதூராக பதிவு செய்து உள்ளார் இதனை ஆதாரத்துடன் காவல் துறையினர் கைப்பற்றினர் பின்னர் திமுக பிரமுகர் ஆன முரளிகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion