மேலும் அறிய
Advertisement
அரசு கொடுத்த 1000 ரூபாய்..! 500 சரக்குக்கு..! மீதம் 500 துணிவுக்கு..! சொல்கிறார் முன்னாள் அமைச்சர்
"ஒரு திட்டத்தினால் குடும்பத்திற்கு வருமானம் எவ்வளவு வரும் என்பதைத்தான் எண்ணி பார்ப்பார்களே தவிர, நாட்டு மக்களை பார்க்க மாட்டார்கள்" என அமைச்சர் குற்றச்சாட்டு
பொங்கல் பண்டிகைக்கு நீங்கள் வாங்கிய ஆயிரம் ரூபாய் எங்கே போனது என்றால், 500 ரூபாய் டாஸ்மார்க் கடைக்கும்,500 ரூபாய் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட துணிவு படத்திற்கும் சென்றது . காஞ்சிபுரத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் உணர்ச்சி பெங்க பேச்சினர்.
500 ரூபாய் டாஸ்மார்க் கடைக்கும்
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 16 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு களக்காட்டூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் முன்னணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் பேசியபோது, பொங்கல் பண்டிகைக்கு நீங்கள் வாங்கிய ஆயிரம் ரூபாய் எங்கே போனது என்றால் 500 ரூபாய் டாஸ்மார்க் கடைக்கும், 500 ரூபாய் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்ட துணிவு படத்திற்கும் சென்றது. எல்லாம் ஆயிரம் ரூபாய் டிக்கெட், திமுக ஆட்சியில் துணிவு படத்திருக்கும், வாரிசு படத்திற்கும், எவ்வளவு டிக்கட் என்றால் ஆயிரம் ரூபாய், பாவம் இந்த பிள்ளைகள் எல்லாம்,ஆயிரம் ரூபாய் கொடுத்து படத்தை பார்த்துவிட்டு வருகிறார்கள்.
குடும்பத்திற்கு வருமானம்
இந்த படங்களை யார் எடுத்து வெளியிட்டது தெரியுமா? முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடைய பிள்ளை உதயநிதி ஸ்டாலின் உடைய ரெட் ஜெயிண்ட் மூவிஸ். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலமாக நம்மிடம் கொடுத்த ஆயிரம் ரூபாயை திரும்ப பிடுங்கிக் கொண்டார்கள், எப்படிப்பட்ட திருடர்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். திமுகவில் ஒரு திட்டம் போடுகிறார்கள் என்றால், இந்த திட்டத்தினால் குடும்பத்திற்கு வருமானம் எவ்வளவு வரும் என்பதை தான் எண்ணி பார்ப்பார்களே தவிர, நாட்டு மக்களை பார்க்க மாட்டார்கள், நாட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய அரசு புரட்சித்தலைவி ஜெயலலிதா அரசு, என உணர்ச்சி பொங்க சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion