மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source:  Poll of Polls)

Air Show, கூட்ட நெரிசலில் இறக்கவில்லை, வெயில் தாக்கத்தால் இறந்துள்ளனர் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

விமானப்படை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் யாரும் இறக்கவில்லை , வெயில் தாக்கத்தினால் மட்டுமே இறந்தனர் - அமைச்சர் மா சுப்பிரமணியன் 

வெயில் தாக்கத்தில் இறந்தனர்

 சென்னை லயோலா கல்லூரியில் காலநிலை மாற்றம் , மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஒரு நாள் கருத்தரங்கிற்கான மலரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும்  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ;

சென்னை மேயர் பிரியா கூறும் போது , வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கியுள்ளோம். வடகிழக்கு பருவமழை குறித்து லயோலா கல்லூரி மழைக் காலத்துக்கு முந்தைய நடவடிக்கை குறித்து ஒருநாள் கருத்தரங்கை நடத்துகிறது.

தமிழகத்தில் புயல் , பருவமழைக் காலங்களில் அரசுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மாணவர்களும் சமூக பிரச்சனைகளில் ஒருங்கிணைவது முக்கியத்துவமானது. 

மெரினா விமான சாகசத்தின் போது இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறவில்லை. 1932 ல் தொடங்கப்பட்டது இந்திய விமானப்படை , 93 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது , தனது பலத்தை விமானப்படை காட்டுவதற்கு சென்னையை தேர்வு செய்தனர்
தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டம் நடத்தி சேவைத் துறைகளை ஒதுங்கிணைத்தது தமிழ்நாடு அரசு விமானத்துறை கேட்ட அனைத்து வசதியையும் செய்து கொடுத்தோம். 

தயார் நிலையில் மருத்துவமனை 

இந்திய ராணுவத்தின் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பிலும்  பல்வேறு மருத்துவக் குழுக்கள் மெரினாவில் இருந்தனர். அவசர உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் மெரினாவில் தயார் நிலையில் இருந்தன. ஆயிரக்கணக்கான பாரா மெடிக்கல் குழுவினர் பணியில் இருந்தனர்..

அரசு மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்குமாறு விமானப் படை கூறியிருந்தது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி. ஓமந்தூராரர் மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை என  4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருந்தன. போதுமான ரத்தம் தயார் நிலையில் இருந்தது , 65 மருத்துவர்கள் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்தனர்.

அரசியல் செய்ய நினைத்தால் தோற்று போய் விடுவர்

விமானப்படை சாகச நிகழ்ச்சியில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.  வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை , தண்ணீர் எடுத்து வருமாறும்  , கண்ணாடி , தொப்பி அணிந்து வருமாறு விமானப் படை கூறியிருந்தது. வெயிலே இருக்காது எல்லோரும் வாருங்கள் என விமானப் படை கூறவில்லை , வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றே கூறியிருந்தனர்.

மெரினா விமானப் படை சாகசத்தின் போது இறப்பு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது. இறந்தோருக்கு அனுதாபம் தெரிவித்து கொள்கிறோம் , இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் தோற்று போய் விடுவர். 

உயிரிழந்த 5 நபர்களும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பலனின்றி யாரும் இறக்கவில்லை. 5 மரணமும் வெயிலின் தாக்கத்தாலே ஏற்பட்டது.  வெயிலின் தாக்கத்தால் நேற்று 102 பேர் பாதிப்பு , மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

15 லட்சம் பேரும் மெரினா முழுவதும் மட்டுமிருந்து பார்க்கவில்லை , வான் எல்லை தெரியும் பல இடங்களில் இருந்தும் பார்த்துள்ளனர். கால் முறிவு , மூச்சுத் திணறல் , குடலிறக்கம் , செரிமான கோளாறு உள்ளிட்ட காரணங்களால் 7 பேர்  சிகிச்சை பெறுகின்றனர்,

குடும்பத்தினருக்கு இழப்பீடா ?

பொது மக்களுக்கு தேவையான அனைத்தை வசதிகளையும் அரசு செய்திருந்தது. மெரினாவுக்கே வராத ,   பூதக் கண்ணாடி வைத்து குறை சொல்லும் சில நக்கீரர்கள் தான் அரசை குறை சொல்கின்றனர். தட்ப வெப்ப நிலையை பொறுத்து விமான சாகச நேரத்தை விமானப் படைதான் முடிவு செய்திருந்தது.  விமானப் படையை குறை கூற முடியாது. வெயிலின் தாக்கம் தான் பாதிப்புகளுக்கு காரணம். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை. 

இறந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். 15 லட்சம் பேர் கூடினாலும் சிறிய நெரிசல் கூட ஏற்படவில்லை . இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாகும்.  5 பேர் இறந்ததற்கு வெயில்தான் காரணம் என்று கூறிய பிறகும் அதையே கேட்டு  குளிர்காய நினைக்க கூடாது. 

15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும். 7, 500 காவலர்கள் பணியில் இருந்தனர்.  விநாயகர் சதுர்த்திக்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை விட குறைவான காவலர்களே நேற்று பணியில் இருந்தது ஏன்? என கேட்கிறீர்கள். வடநாட்டு ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல்களை எல்லாம் குறிப்பிட்டு சொல்லி நான் லாலி.. லாவணி.. பாட விரும்பவில்லை. கனிமொழி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் . 

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா கூறும்போது ,  சென்னை மாநகராட்சி சார்பில் நான் 4 மணிவரை மெரினா பகுதியில் பணியில் இருந்தேன். அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்திருந்தது. மாநகராட்சி சார்பில் போதுமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி இருந்தோம். ஆனால் மதியம் ஒரு மணி உச்சிவெயில் என்பதால் 15 லட்சம் பேர் வந்ததால் மயக்கமடைந்துள்ளனர் . மாநகராட்சி சார்பில் கடற்கரையில் இருந்த கடைகளை அகற்றி பேரிகார்ட் அமைத்தோம்  என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
Gautam Adani: எனக்கே பிடிவாரண்டா..! அதானி எடுத்த அதிரடி முடிவு, இந்திய பங்குச் சந்தையில் தடாலடி மாற்றம்
Gautam Adani: எனக்கே பிடிவாரண்டா..! அதானி எடுத்த அதிரடி முடிவு, இந்திய பங்குச் சந்தையில் தடாலடி மாற்றம்
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Maharashtra Elections Exit Poll Results : ஆட்சியை தக்கவைக்கும் பாஜக?சோகத்தில் ராகுல் காந்தி!Jharkhand Elections Exit Poll Results : அரியணை ஏறும் பாஜக?சரிவை சந்திக்கும் ராகுல்!Hosur Lawyer Murder | நடுரோட்டில் பயங்கரம்!ஓசூர் வழக்கறிஞர் படுகொலை! விரட்டி விரட்டி வெட்டிய வாலிபன்AR Rahman Divorce |‘’நானும் கணவரை பிரிகிறேன்!’’AR ரஹ்மான் GUITARIST பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
Gautam Adani: எனக்கே பிடிவாரண்டா..! அதானி எடுத்த அதிரடி முடிவு, இந்திய பங்குச் சந்தையில் தடாலடி மாற்றம்
Gautam Adani: எனக்கே பிடிவாரண்டா..! அதானி எடுத்த அதிரடி முடிவு, இந்திய பங்குச் சந்தையில் தடாலடி மாற்றம்
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்: ஆளுநர் மாளிகை அதிரடி உத்தரவு
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
Adani: அச்சச்சோ..! கைதாகிறாரா மோடியின் நண்பர் கவுதம் அதானி - ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக பிடிவாரண்ட்
IND VS AUS :
IND VS AUS : "என்ன திமிர் இருக்கனும்.." இந்திய வீரர்களை மட்டம் தட்டிய கம்மின்ஸ்.. கிழித்து தொடங்கவிடும் ரசிகர்கள்
Top 10 News: அதானி பங்குகள் வீழ்ச்சி, மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு சலுகை - டாப் 10 செய்திகள்
Top 10 News: அதானி பங்குகள் வீழ்ச்சி, மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு சலுகை - டாப் 10 செய்திகள்
Home Loan: வீட்டு கடன் வாங்க திட்டமா?  இந்த ஆவணம் கையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? விவரம் இதோ..!
Home Loan: வீட்டு கடன் வாங்க திட்டமா? இந்த ஆவணம் கையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன? விவரம் இதோ..!
Vidaamuyarchi: சபரிமலையில் விடாமுயற்சி டீசர் கேட்ட AK பாய்ஸ்! அஜித் ரசிகர்கள் அட்டகாசம்!
Vidaamuyarchi: சபரிமலையில் விடாமுயற்சி டீசர் கேட்ட AK பாய்ஸ்! அஜித் ரசிகர்கள் அட்டகாசம்!
Embed widget