மேலும் அறிய
Advertisement
இபிஎஸ் மீது போடப்பட்ட பொய் வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறவில்லை என்றால்...-ஓ.எஸ்.மணியன் அதிரடி
சட்டத்தை எவ்வாறு வேண்டுமானாலும் வளைக்கலாம் என்ற தமிழக அரசின் எண்ணத்திற்கு பாதகமே வந்து சேரும்.
சட்டமன்றம் கூடும் முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறவில்லை என்றால், சட்டமன்றத்தில் அதற்கான தீர்வு காண முயல்வோம் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்வரன் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்து பேஸ்புக் லைவ் செய்த ராஜேஸ்வரன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பாதுகாவலர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து அதிமுகவினர் தாக்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்த நிலையில் சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பு மீதும் மதுரை மாநகர காவல் துறை வழக்கு பதிவு செய்தது. எடப்பாடி பழனிசாமி மற்றும் பாதுகாவுலர் கிருஷ்ணன், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மகன் மற்றும் அடையாளம் தெரியாத அதிமுக நபர் உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தனர் இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறையினர் வழக்கு செய்ததை கண்டித்து நாகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவுரித்திடலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ எஸ் மணியன், ஜீவானந்தம், ஜெயபால், உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட அதிமுக வினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும், பாதுகாவலர் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் கூறிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், “சட்டத்தை எவ்வாறு வேண்டுமானாலும் வளைக்கலாம் என்ற தமிழக அரசின் எண்ணத்திற்கு பாதகமே வந்து சேரும் என்றும், சட்டமன்றம் கூடும் முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் ஓ எஸ். மணியன் அவ்வாறு தமிழக அரசு திரும்ப பெறவில்லை என்றால் சட்டமன்றத்தில் அதற்கான தீர்வு காண முயல்வோம்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion