அதிமுகவில் அனைத்து நிர்வாகிகளும் கருத்து சொன்ன பிறகே நான் கருத்து சொல்லுவேன் - டிடிவி தினகரன்
’’அதிமுகவில் இணைவதற்கு மோடி பச்சைக் கொடி காட்டி விட்டதாக கூறப்படும் கேள்விக்கு, நகைப்பை வெளிப்படுத்திய அவர்; நானும் உங்களைப் போன்றுதான் என்றார்’’
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அமமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார். தனியார் ஹோட்டலில் தங்கிய டிடிவி தினகரனை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு வென்ற கவுன்சிலர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், அப்போது எனக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அந்தக் கட்சியின் உள் கட்சி விவகாரத்தில் எட்டிப் பார்த்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் அதிமுகவில் அமமுகவை இணைப்பதற்கு தீர்மானத்தில் எங்கள் கட்சி பெயர் சம்பந்தப்பட்டு இருப்பதால் அதைப்பற்றி சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதனால் தான் நான் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்து அதைப்பற்றி கூறியுள்ளேன்.
அதிமுகவில் இணைவதற்கு மோடி பச்சைக் கொடி காட்டி விட்டதாக கூறப்படும் கேள்விக்கு, நகைப்பை வெளிப்படுத்திய அவர்; நானும் உங்களைப் போன்றுதான் என்றார். தேனி மாவட்ட செயலாளர் ஷாகிர்கான் அதிமுகவில் அமமுக உடன் இணைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நேற்று இரவு 9.30 மணி அளவில் தான் பார்த்தேன். எனக்கே அதனை பற்றி தெரியவில்லைஅதிமுகவின் சுய பரிசோதனையில் தொடக்கமாகவும் இருக்கலாம் என்றார்.
அதிமுகவில் உள்ள ஒட்டுமொத்த நிர்வாகியும் கருத்து சொன்ன பிறகே இது குறித்து நான் கருத்து கூற முடியும். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை அமமுக முறியடிக்குமா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் உள்ளது. அதற்குள் நாங்கள் சரியான நிலையை உருவாக்குவோம் நிச்சயமாக இந்த மக்கள் விரோத ஆட்சியை முறியடிப்போம்.
அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கு அமமுக நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளார்களா ? என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை. 5 மாநிலத் தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு ஆரூடமும் தீர்க்க தரிசனமும் தெரியாது. வருகின்ற 10ஆம் தேதி வெளியாக தேர்தல் முடிவுகளை பார்த்தால் தெரிந்து விடும். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மற்றும் இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்களை இந்திய அரசு மற்றும் தமிழக அரசு பத்திரமாக மீட்க வேண்டும் என தெரிவித்தார்.