"துரைமுருகனுக்கு அனுபவம் எவ்வளவு இருக்கும்? ஆனால் அவர் இவ்வாறு பேசி வருகிறார்" - இபிஎஸ் பேச்சு..
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தலைவாசல் பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”எம்ஜிஆர் கட்சியை தோற்றுவிக்கும்போது பல்வேறு பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அந்த சோதனைகள் எல்லாம் சாதனைகளாக மாற்றி காண்பித்தவர் எம்ஜிஆர், அந்த அளவிற்கு கருணாநிதி, எம்ஜிஆர்க்கு பல்வேறு இடையூறுகளை தந்தார். இடையூறுகளை தவிர்த்து வெற்றி பெற்றவர் எம்ஜிஆர்.
அதேபோன்று ஜெயலலிதா பொறுப்பேற்றபோதும் பல்வேறு இன்னல்களை சந்தித்து இந்த இயக்கத்தை பிரமாண்டமாக யாராலும் வெல்ல முடியாததாக உருவாக்கி வெற்றி கண்டவர். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் பல்வேறு இன்னல்களை சந்தித்து சாதனை கண்டவர்கள். ஜெயலலிதா அதிமுகவுக்கு வரும்போது என்ன சோதனை சந்தித்தாரோ அதே சோதனையை நாம் சந்தித்து வருகிறோம். இருபெரும் தலைவர்களும் சோதனைகளை எவ்வாறு வென்றெடுத்தார்களோ அவ்வாறு வென்றெடுத்து சாதனை புரிவோம். கழக பொதுச்செயலாளர் பதவியை தொண்டர்கள் மூலமாக எனக்கு வழங்கியுள்ளீர்கள். அதிமுக இனிவரும் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற பாடுபடுவேன் என்று கூறினார்.
மேலும், திமுக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் ஊழல். கரப்ஷன் கலெக்ஷன் இதுதான் திமுக. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி. ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள். நிறைய திட்டம் சொன்னீர்கள் இதுவும் வரவில்லை. இந்த ஆட்சியில் மக்கள் பெரும் துன்பத்தில்தான் உள்ளனர். நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல் தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி கொடி நாட்டுவோம் அதிமுகவின் அம்மாவின் ஆட்சி நடைபெற பாடுபடுவோம். அதிமுக நிர்வாகிகள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது அனைத்தையும் தகடு தகடு பொடியாக்கி சட்டத்தின்படி வெற்றி பெறுவோம்.
அதிமுக எப்பொழுதும் பொய் வழக்குக்கு அஞ்சாது. குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சி திமுக கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் வாரிசுகள் கிடையாது. இங்கிருக்கும் நாம்தான் வாரிசுகள். குடும்பத்திற்காக பாடுபட்ட கட்சி திமுக, மக்களுக்காக பாடுபட்ட கட்சி அதிமுக. திமுகவில் மிட்டா மிராசுதாரர்கள்தான் பதவிக்கு வர முடியும். அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என அனைத்து பதவிகளுக்கும் வரலாம். அமைச்சர் துரைமுருகன் கருணாநிதியுடன் இருந்ததாகவும், அதன் பிறகு ஸ்டாலின் உடன் இருந்ததாகவும், இனி உதயநிதியுடனும் இன்பநிதியுடனும் இருப்பேன் என்று கூறுகிறார். துரைமுருகன் அனுபவம் எவ்வளவு உள்ளது? ஆனால் அவர் இவ்வாறு பேசி வருகிறார். திமுக என்பது அடிமைக் கட்சி. என்னை போல் லட்சக்கணக்கான தொண்டர்கள் கழகப் பொதுச் செயலாளராக வருவதற்கு தகுதி உள்ளது. அனைவரையும் பொதுச்செயலாளராகத்தான் பார்க்கிறேன். உங்களில் ஒருவனாக நின்றுதான் பேசி வருகிறேன். தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்து இங்கு வந்து பேசி வருகிறேன் என்றார்.
அதிமுகவில் பதவிகள் சரிசமமாக வழங்கப்படும், ஏற்றத்தாழ்வு இருக்காது. பதவி என்பது தோளில் போட்ட துண்டு மாதிரி, பதவியை பெரிதாக நினைக்கக் கூடாது. உடலுக்கு உயிர் எப்படி இருக்கிறதோ அதேபோன்று அதிமுகவிற்கு தொண்டர்கள் உயிராக இருந்து வருகின்றனர். அதிமுகவை முடக்க, நினைத்தால் அழிந்து போவார்கள். ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என்பது தமிழகம் முழுவதும் ஒலித்துக் கொண்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுக வீழ்த்த முடியாது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம், ஒரே நாடு ஒரே தேர்தல் வரலாம் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் மக்களுக்கான திட்டங்கள் வழங்கப்படும். அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பெரும்பான்மையான திட்டங்கள் நிறுத்திவிட்டன இதுதான் திராவிட மாடலா?. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அதற்காக உழைப்போம், என்றார்