மேலும் அறிய

Guest lecturers Issue: கவுரவ விரிவுரையாளர் பிரச்னை.. அவங்கள கூப்பிட்டு பேசுங்க.. பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை..!

Ramadoss Statement: கவுரவ விரிவுரையாளர்களின் பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 108 நேரடி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 4083 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 1500 கவுரவ விரிவுரையாளர்களும் உள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.10,000 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்பட்டது. பின்னர் அது ரூ.15 ஆயிரமாகவும், நடப்பாண்டின் தொடக்கத்திலிருந்து ரூ.20,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அலைக்கழிக்கப்படுவதாக குற்றசாட்டு 

முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊதியம், அமைப்பு சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைவு ஆகும். அதிலும் ஆண்டு முழுவதும் பணியாற்றினாலும் கூட 11 மாதங்களுக்கு மட்டும் தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் கூட பல நேரங்களில் 5 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப்படாமல் அவர்கள் அரசால் அலைக்கழிக்கப்படும் கொடுமைகளும் நடக்கும்.

கவுரவ விரிவுரையாளர் என அழைக்கப்பட்டாலும் கவுரவமற்றவர்களாகவே அவர்கள் நடத்தப்படுகின்றனர். கவுரவ விரிவுரையாளர்களில் பலர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்களுக்கான ஊதியம் என்பது அவர்களின் தகுதிக்கும், அனுபவத்திற்கும் பொருத்தமானதாக இல்லை. கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.57,000 ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைகழக மானியக்குழு ஆணையிட்டிருக்கிறது.

ஆனால், ஹரியானாவைத் தவிர எந்த மாநிலமும் இதை மதித்து செயல்படுத்தவில்லை. கர்நாடகத்தில் மாத ஊதியமாக ரூ.32,000 வழங்கப்படுகிறது. சம வேலைக்கு  சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இருந்தாலும் கூட, அதை எந்த அரசும் செயல்படுத்துவதில்லை; இன்னும் கேட்டால் அரசுகளே அத்தீர்ப்பை அவமதிக்கின்றன.

40 வயதை கடந்த விரிவுரையாளர்கள்: 

கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பான்மையினர் 45, 50 வயதைக் கடந்து விட்டனர். இதன்பிறகு அவர்கள் வேறு பணிக்கு செல்வதோ, பொதுவான விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதோ சாத்தியமில்லை. அதனால் தான் அவர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிய காலத்தையும், அவர்களின் கல்வித்தகுதியையும் கொண்டு அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என தொடர்ந்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.

வாக்குறுதி அளித்த அமைச்சர் பொன்முடி 

முந்தைய ஆட்சியின் நிறைவில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால், நீதிமன்ற வழக்குகளால் அது சாத்தியமாகவில்லை. புதிய அரசு பதவியேற்ற பிறகும் கூட கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பல மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இத்தகைய சூழலில் தான் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களுக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்; பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7&ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தனர். ஆனால், அரசுத் தரப்பிலிருந்து  எவரும் அவர்களை சந்தித்து பேசவில்லை. மாறாக,  அவர்களை அச்சுறுத்தி போராட்டத்தை திரும்பப் பெறச் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அழைத்து பேச வேண்டும் 

ஆசிரியர்கள் மரியாதைக்குரியவர்கள். அவர்கள் தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கோரி போராடும் நிலையை அரசு ஏற்படுத்தக்கூடாது. கவுரவ விரிவுரையாளர்களை அழைத்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்த வேண்டும். பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Ukraine Hits Russia: ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Ukraine Hits Russia: ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
ரஷ்யாவை கதறவிட்ட உக்ரைன்; தண்ணீருக்கடியில் ட்ரோன் தாக்குதல்; சிதறிய நீர்மூழ்கிக் கப்பல் - வீடியோ
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
Embed widget