விழுப்புரத்தில் பழங்குடி, இருளர், ஆதிதிராவிட மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி வேண்டும் - ரவிக்குமார் எம்.பி கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர்,ஆதிதிராவிட மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசு துவங்க வேண்டும்; எம் பி ரவிக்குமார் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடி இருளர், ஆதிதிராவிட மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை தமிழக அரசு துவங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் நகர பகுதியான பூந்தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு திமுக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் அதிகளவில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் 88 பள்ளிகள் உள்ளதால் இப்பள்ளிகளில் கொரோனாவிற்கு பிறகு, மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதால் இதை சுட்டிக்காட்டி, முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதிய உடனே ஆசிரியர்கள் நியமிக்க எடுத்துள்ளதால் தமிழக முதல்வருக்கு நன்றி.
அதிர்ஷ்டம் தரும் வைரக்கல் தருவதாக கூறி 5 லட்சம் அபேஸ் - காவலர் உட்பட 3 பேர் கைது
17 வயது மகளுக்கு தந்தை, அண்ணன்களால் பாலியல் வன்கொடுமை.. உடந்தையாக தாய்.. சென்னையில் கொடூரம்..
கல்வித்துறை கட்டுப்பாட்டில், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை கொண்டுவர வேண்டும். மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ள நிலையில் கடந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். அதில், ஒருவர் கூட ஆதிதிராவிடர் நலப்பள்ளியை சேர்ந்தவர் இல்லை என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கல்வித்தரம் பாதிக்கப்படும் .
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - 3 பேரை காவலில் எடுக்க போலீஸ் தயக்கம்?
தற்போது, புதிய கல்விக்கொள்கை உருவாக்க, முதல்வர் ஒரு குழுவை உருவாக்கியுள்ளதால் அதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த ஒரு குழு அமைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் படிக்க ஒரு ஏகலைவா பள்ளியை கொண்டுவர வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றேன். இதேபோன்று, மாநில அரசு விழுப்புரம் மாவட்டத்தில் உண்டு உறைவிட பள்ளியை ஆரம்பிக்க வேண்டும் என ரவிக்குமார் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

