மேலும் அறிய
Advertisement
முதல் மரியாதை; படப்பை குணா மனைவிக்கு பாஜக கலர் மாலை.. ஊர் முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்..
படப்பை குணாவின் மனைவிக்கு பாரதிய ஜனதாவில் காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
படப்பை குணா
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என். குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது.
குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். இவற்றில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவர் மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளைத்துரை தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். என்னுடையது படப்பை குணா காவல்துறையினர் , எப்படியும் கைது செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பொன் ராதாகிருஷ்ணன்...
படப்பை குணாவில் மனைவி எல்லம்மாள் தற்போது ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். ஒன்றிய சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட அவர், அவரை எதிர்த்துப் போர்த்தி விட்ட திமுக வேட்பாளருடன் சம வாக்குகளைப் பெற்று குலுக்கல் முறையில் தோல்வி அடைந்தார். படப்பை குணாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த சமயத்தில், பாரதி ஜனதா கட்சியை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன், ரகசியமாக எல்லம்மாளை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. படப்பை குணா உயிருக்கு பயந்து பாஜகவில் சேர்ந்தார், என சமூக வலைத்தளத்தில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி மௌனம் சாதித்து வந்தது.
மனைவிக்கு பதவி..
இந்நிலையில் படைப்பை குணாவின் மனைவிக்கு மாவட்டத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மேல்மட்ட நிர்வாகிகள் ஒப்புதலுடன், மாவட்டத் தலைவராகவும் பதவி வகித்து வரும் கே. எஸ். பாபு வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலில், எல்லம்மாள் குணாவை காஞ்சிபுரம் மாவட்டத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் மரியாதை...
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பதவி ஏற்ற பொழுது, பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆள் உயர மாலை அணிவித்து படப்பை குணாவின் மனைவிக்கு காஞ்சிபுரம் மாவட்ட பாஜக துணைத் தலைவராக பதவி ஏற்பு விழா நடைபெற்றுள்ளது.
அதேபோல தன்னை காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவராக நியமித்த பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி தெரிவித்து எல்லம்மாள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல படப்பை குணாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும், G. ஜோஸ்வா ஜேம்ஸ் என்பவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion