மேலும் அறிய

Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?

Chembarambakkam Lake Water Level: செம்பரம்பாக்கம் ஏரியை பொருத்தவரை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது . சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர், செல்லும் பாதை தான் காரணமாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி  - Chembarambakkam Lake Water Level

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. 

செம்பரபாக்கம் ஏரி நிலவரம் என்ன ? - Chembarambakkam Lake 

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 18.28 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 2.198 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 650 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழை எச்சரிக்கை என்ன ? Rain alert in Tamil Nadu 

27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

28-11-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.‌

29-11-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Embed widget