மேலும் அறிய

PMK Candidate Profile: பா.ம.க.வின் பி.எச்.டி. வேட்பாளர்! தொகுதி முழுவதும் தெரிந்த முகம்! இனிக்குமா மாம்பழம்?

Ganeshkumar PMK candidate: ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக கணேஷ்குமார் அறிவிப்புக்கு காரணம் என்ன? அதனுடைய பின்னணியில் இருப்பது என்ன என்பது குறித்து காணலாம்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில்  பாமக போட்டி 

வந்தவாசி நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் ஏகே மூர்த்தி போட்டியிட பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு ஏகே மூர்த்தி க்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆரணி நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டு 2009-ல் பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியில் ஆரணி தொகுதியில் நின்றது. அதில் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

அதன் பிறகு 2014-ல் பா.ம.க. ஆரணி தொகுதியில்  ஏகே மூர்த்தி  போட்டியிட்டார். அதில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 332 வாக்குகள் வாங்கி தோல்வியுற்றார். 2019-ல்  பாமக  அதிமுக கூட்டணியில் இருந்தது. அப்போதும் அதிமுக ஆரணி தொகுதியில் போட்டியிடு தோல்வி அடைந்தது. அதன் அடிப்படையிலும் ஆரணி தொகுதியில்  ஒருமுறை கூட வெற்றியை பார்க்காத பாமகவினர் வரக்கூடிய தேர்தலில் பாமக  களம் இறங்க வேண்டும் என தொண்டர்கள் குரல் எழுப்பி வந்தனர்.

இதனால் இந்தமுறை பாமக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஆரணி தொகுதியில் பாமக போட்டியிட வேண்டும், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாமகவின் அதிக அளவில் வாக்கு வாங்கி உள்ளது, இதனால் பாமக கண்டிப்பாக ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாமக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் பாமக தலைவரிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் பாஜக பாமகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது.

PMK Candidate Profile: பா.ம.க.வின் பி.எச்.டி. வேட்பாளர்! தொகுதி முழுவதும் தெரிந்த முகம்! இனிக்குமா மாம்பழம்?

திருவண்ணாமலை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கணேஷ்குமார்

இந்த கூட்டணியில் பாமகவுக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகளை அளித்துள்ளது. அதில் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  நேற்று வெளியிட்டார். அதில் ஆரணி தொகுதிக்கு கணேஷ்குமாரை  அறிவித்துள்ளார். பாமக  சார்பில் ஆரணி தொகுதியில் கணேஷ் குமார்  போட்டியிடவுள்ளார்.  சென்னை பெசன்ட் வைகை தெரு கலாஷேத்ரா காலணி தெருவை சார்ந்த அருணாச்சலம் மகன் கணேஷ்குமார் ME phd இவருடைய கவிதா இவருக்கு பவித்யா என்ற மகள் உள்ளார்.

இவர் 2004 முதல் வன்னியர் சங்க இளைஞர் படை செயலாளர் ,2009ல் வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர், 2011ல் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் ,மணிலா பாட்டாளி இளைஞ்சர் சங்க செயலாளர் தற்போது திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக அறிவித்ததில் இருந்து கணேஷ்குமார் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாமக நிர்வாகிகளுக்கும் , பாமக தொண்டர்களுக்கும் , பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் இவர் பாமக கட்சி தலைவர் அன்புமணிக்கு மிகவும் நெருக்கமானவர். அதேபோல் இவருக்கென ஆரணி தொகுதியில் இளைஞர்கள் பட்டாளமே உள்ளது.  

PMK Candidate Profile: பா.ம.க.வின் பி.எச்.டி. வேட்பாளர்! தொகுதி முழுவதும் தெரிந்த முகம்! இனிக்குமா மாம்பழம்?

பா.ம.க.வின் நம்பிக்கை

ஆரணி நாடாளுமன்ற  தொகுதிக்கு உட்பட்ட வந்தவாசி மற்றும் செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட செயலாளராக கணேஷ் குமார் செயல்பட்டு வருகிறார். செய்யார் பகுதியில் உள்ள மேல்மா சிப்காட் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாகவும், சிப்காட் எதிர்ப்பு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருவதால் செய்யாறு தொகுதி முழுவதும் ஆதரவு இருப்பதாக பாமகவினர் நம்புகின்றனர்.

வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் இவருடைய கல்லூரி செயல்பட்டு வருகிறது. வந்தவாசி முழுவதும் பாமக பலமாக இருக்கும் பகுதி என்பதாலும், இதே பகுதியில் மாவட்ட செயலாளராக இருப்பதாலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறார். மேலும் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

PMK Candidate Profile: பா.ம.க.வின் பி.எச்.டி. வேட்பாளர்! தொகுதி முழுவதும் தெரிந்த முகம்! இனிக்குமா மாம்பழம்?

வாக்குகள் கிடைக்குமா?

எனவே செஞ்சி தொகுதி நன்கு அறிமுகமான தொகுதி மற்றும் பாமகவிற்கு வாக்கு வங்கி தொகுதி என்பதாலும் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறார். மற்றொரு தொகுதியான மயிலம் தொகுதியில் தற்பொழுது பாமகவை சேர்ந்த சிவகுமார் எம்எல்ஏவாக இருப்பது கூடுதல் பலமாக கருதுகின்றனர். ஆரணி மற்றும் போளூர் ஆகிய பகுதிகளில் பாமகவிற்கு கணிசமான வாக்கு வாங்கி மற்றும் ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகம் பாமகவை சேர்ந்தவர்கள் இருப்பதாலும், கூட்டணியில் உள்ளதால் பாஜக , ஆர்.எஸ்.எஸ்,இந்துமுன்னணி கட்சியினர் போளூர் ஆரணி தொகுதியில் கணிசமாக உள்ளதால்  வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் களம் காண்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget