மேலும் அறிய

Gail Gas Pipeline:கெயில் எரிவாயு திட்டம்: திமுகவுக்கு எதிராக போராட்டம்; மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு!

கெயில் எரிவாயு திட்டத்தில் மக்களின் வாழ்வாதார பிரச்சினை வரும் போது திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம், வலியுறுத்துவோம் இதில் எந்த சமரசம் இல்லை.

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதில் கடந்த 23 முதல் 25 வரை ஆகிய தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது அதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது:

பாஜக அரசு நாள்தோறும் மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அடுத்தடுத்து மோசமான மசோதாக்களை நிறைவேற்ற முயற்சி செய்கிறது. ஒளிப்பதிவு மசோதா, கடல் ஒழுங்காற்று மசோதா, 3 வேளாண் சட்டம், தொழிலாளர் சட்டங்கள் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருகிறது. ஸ்டான் சுவாமி மரணம் இயற்கையான மரணம் இல்லை அது ஒரு நிறுவனப் படுகொலை. கோஷ்டி பிரச்சினையை தீர்க்க டெல்லி செல்லும் நிலைக்கு அதிமுக சென்றுள்ளது. அதிமுக எவ்வளவு பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, 2 மாதத்தில் திமுக அனைத்து திட்டங்களுக்கும் நிறைவேற்ற முடியாது.  10 ஆண்டுகளில் எவ்வளவோ கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கலாம், ஆனால் அக்கட்சி அதனை செய்யவில்லை. திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தும்  தார்மீக உரிமை அதிமுகவுக்கு இல்லை. கெயில் எரிவாயு திட்டத்தில் மக்களின் வாழ்வாதார பிரச்சினை வரும் போது திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம், வலியுறுத்துவோம் இதில் எந்த சமரசம் இல்லை.  கூட்டணி கட்சிகள் எல்லா பிரச்சனைகளையும் ஒத்த கருத்துடன் இருப்பார்கள் இல்லை, பாஜகவை, அதிமுகவை எதிர்க்கும் கொள்கையின் படி ஒன்றிணைந்து செயல்பட்டது. அந்த வகையில் அரசியல் கனவை மார்சிஸ்ட் கட்சி  நிறைவேற்றி உள்ளது. கியூபா மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க அரசை கண்டித்து விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து 29 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

Gail Gas Pipeline:கெயில் எரிவாயு திட்டம்: திமுகவுக்கு எதிராக போராட்டம்; மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு!

முன்னதாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தோம், தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என நானும் ஓபிஎஸும் பிரதமரிடம் வலியுறுத்தினோம். மேகதாது அணையை பொறுத்தவரை முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது சரி, ஓபிஎஸு ம் நானும் முதல்வராக இருந்தபோதும் சரி அங்கு அணை கட்டக்கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு, மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும், தமிழ்நாட்டில் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளன. எனவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு உதவக்கூடாது என கோரிக்கை வைத்தோம், நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம், தமிழகத்தில் பல்வேறு சாலைகளை அமைக்க மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ள நிலையில் அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget