மேலும் அறிய

Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர்கள்..யாருக்கு வெற்றி? முழு விவரம் உள்ளே!

இந்திய மக்களவை தேர்தலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர்களின் வெற்றி தோல்வி குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யூசுப் பதான் உட்பட மொத்தம் 4 விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர். 

இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரம் இந்த தேர்தலில் போட்டியிட்ட விளையாட்டு வீரர்களின் வெற்றி தோல்வி குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்:

யூசுப் பதான்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான். இவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள பஹரம்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தவகையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆதிர் ரஞ்சனை 60000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கீர்த்தி ஆசாத்:

யூசுப் பதானை போலவே இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். இவர் கடைசியாக 1986 இல் இந்தியாவுக்காக விளையாடியவர். இவர் மேற்குவங்கம் மாநிலம் பர்தாமான்-துர்காபூர் லோக் தொகுதியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜகவின் திலீப் கோஷ். ஆனால் அவரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் கீர்த்தி ஆசாத்.

தேவேந்திர ஜஜாரியா:

இந்திய பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா. இவர் ராஜஸ்தான் மாநிலம் சுரு மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் கஸ்வானிடம் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திலீப் குமார் டிர்கி

இந்தியாவின் முன்னாள் பீல்ட் ஹாக்கி கேப்டன் திலீப் குமார் டிர்கி. ஒடிசாவின் சுந்தர்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் பிஜு ஜனதா தளத்தின் வேட்பாளராக களம் இறங்கிய திலீப் குமார் பாஜக வேட்பாளர்  ஜுவல் ஓரமிடம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget