மின்சார கட்டணம் ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை உயர்த்திய திமுக - எம்.ஆர். விஜயபாஸ்கர்
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம் என்று கூறிவிட்டு மின்சார கட்டணம் ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை உயர்த்திய திமுக அரசு என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு.
செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுக ஆட்சி இல்லை. அதுதான் உண்மை என கரூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அதிமுக கொடியினை ஏற்றி வைத்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர், அதிமுக செய்தி தொடர்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது: கிராம சபை கூட்டம் என்ற பெயரில் மக்களின் குறைகளை மனுவாகப் பெறுகிறோம். திமுக ஆட்சி அமைந்த உடன் 100 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம் என்று கூறிவிட்டு மக்களை ஏமாற்றிய திமுக அரசு சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு தருகிறோம் என்று கூறிவிட்டு 4 லட்சம் பேருக்கு இல்லை. இந்த மாதம் மட்டும் 40 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை திமுக அரசு ரத்து செய்துள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு வந்து சேரும். அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. மகளிர் உரிமைத் தொகையை ரூபாய் 1000 கொடுத்துவிட்டு மதுபான பாட்டில்களின் விலை 10 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை உயரந்து உள்ளது. ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என்று வழங்குகிறோம் என்று கூறிவிட்டு மதுபானங்களின் விலைகளை உயர்த்தி விட்டுப் போகின்றனர். பாதிக்கப்படுவது மகளிர் மட்டும் தான் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மின்சார கட்டணத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 5000 வரை மின்சார கட்டணத்தை உயர்த்தி விடுகிறீர்கள். அமைச்சர் பதவியை ஒரு முறை கூட பார்க்காத ஒருவருக்கு அமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்தவர் புரட்சித்தலைவி அம்மா அவருக்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜி தற்பொழுது புழல் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். திமுக அமைச்சர்களுக்கு ரைடு போனதற்கு எந்த ஒரு கவலையும் இல்லை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தவுடன் ஸ்டாலினின் குடும்பமே அதிகாலையில் சென்று பார்க்கின்றார்கள். செந்தில் பாலாஜியும் கலைஞர் கருணாநிதியும் மாமன் மச்சான் இல்லை மாப்பிள்ளையா? வித விதமாக கொள்ளையடிப்பதில் கற்றுக் கொடுத்தவர் கைதாகி சிறையில் உள்ளார். என்பதே கவலையாக உள்ளது ஸ்டாலினைப் பற்றி செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுக ஆட்சி இல்லை அதுதான் உண்மை மணல் மாஃபியாக்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனையால் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியில் மாட்டுவண்டியில் மனிதர்களை வைத்து மணல் அல்லலாம் ஒரு மாட்டு வண்டிக்கு 105 ரூபாய் கட்டினால் போதும் எனவும் சுற்றுச்சூழல் துறையின் மூலமாக அனுமதி பெற்றுத் தந்த அரசு அதிமுக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு மினி பொக்லின் இரண்டு மினி டிப்பர் வைத்து மணல் அள்ளலாம் என திருத்தம் செய்து. 2000 லோடு மணல் திருட்டுத்தனமாக அள்ளிவிட்டு அமலாக்கத்துறை சோதனையில் மாட்டிக் கொண்டுள்ளனர் 10 வருடம் அள்ளக்கூடிய மணலை மூன்றே மாதத்தில் அள்ளிவிட்டனர். இந்த மணல் கொள்ளையால் பாலைவனமாகும் நிலை உள்ளது காவிரி ஆற்றுப் படுகையில் மாட்டு வண்டி உரிமையாளர்களிடம் திமுக ஆட்சி அமைந்த உடன் அல்லலாம் என்று செந்தில்பாலாஜி கூறிய நிலையில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் குடும்பத்தினர் உறவினர்கள் என கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்துவிட்டு மாட்டு வண்டி உரிமையாளர்களை மக்களை ஏமாற்றியது செந்தில் பாலாஜி என்றும் பொய்யைச் சொல்லி மட்டுமே வெற்றி பெற்றார் வரை கொள்ளை அடித்து வரும் திமுக அரசு. இவ்வாறு கூறினார்.
அதிமுக செய்தி தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் பேசுகையில்: திராவிட மாடல் என்றால் தளபதியிடம் கேளுங்கள் துண்டு பேப்பரை வைத்து படிக்கும் ஸ்டாலின் இரண்டாவது பேப்பரை எடுத்து விட்டால் தடுமாறி விடுவார். அண்ணாவைப் பற்றி குறைத்துச் சொன்ன அண்ணாமலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் நடைப்பயணத்தில் கோவில்பட்டி ஒரு வாரம் கோயிலுக்கு செல்கிறார் பூம்புகாரில் நடைபெறுகிறது டெல்லி செல்கிறார் இப்படி ஒரு நடை பயணம் இந்தியாவின் சுதந்திர வேள்வி நடத்திய மோகன்தாஸ் கரன்சன் காந்திக்கு கூட தெரியாது அப்படி ஒரு நடை பயணம் தவணை முறையில் தவழ்ந்து கொண்டு நடைபயணம் திமுகவை தொடங்கியவர் யார் அண்ணா பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதற்கு எந்த ஒரு ஒரு வரி பதில் சொன்னதா? அவர்களுக்கு உதய அண்ணாவை தெரிந்த அளவிற்கு கூட அண்ணாவை மறந்து விட்டார்கள் திமுகவினர் அண்ணா என்றாலே உதய அண்ணா மட்டும் தான் காவேரி பிரச்சனை ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக அரசு அண்ணாவைப் பற்றி தவறாக சொன்ன நிலையில் அதிமுக கட்சி பாஜகவை விட்டு வெளியே வந்ததோ காவிரி நதி நீர் பிரச்சனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின்காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வர தயாரா என்று கூறினார்.