மேலும் அறிய

EPS: "ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு போலி வெற்றி... கள்ளஓட்டு மூலமாக அதிக வாக்குகளை பெற்று, மமதையில் உள்ளார்கள்" -இபிஎஸ் ஆவேசம்.

டெல்லியில் பாஜக வெற்றி பெற்றதற்கு, அங்குள்ள மக்கள் பாஜக விரும்புகிறார்கள். இந்திய கூட்டணிக்கு மக்கள் சமட்டி அடி கொடுத்துள்ளார்கள் என்றும் கூறினார்.

சேலம் ஓமலூர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "கிருஷ்ணகிரி சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வேலூரில் கர்ப்பிணிப் பெண் தாக்கப்பட்டு, பாலியல் தொந்தரவு சம்பவம் வேதனையளிக்கிறது. அதேபோல, தமிழக காவல்துறை உயர்பதவியில் உள்ள ஏடிஜிபி தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறுவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை எனும்போது சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. இது ஒரு திறமையற்ற அரசாங்கம் ஆட்சியில் இருப்பதைக் காட்டுகிறது .இது வேதனையளிக்கிறது. சிவகங்கையில் காவல்நிலையில், ஒரு பெண் எஸ்.ஐ தாக்கப்படுகிறார். பாதுகாப்பு தருகின்ற காவல்துறைக்ககே இந்த நிலைமை என்றால் நமக்கு யார் பாதுகாப்பு தருவது. ஸ்டாலின் மாடல் அலங்கோல ஆட்சியே இதற்கு காரணம். இந்த அரசுக்கு நான் வெளிப்படுத்துகிற கருத்துக்களை கவனித்து நடவடிக்கை எடுத்து இருந்தாலே இதை தவிர்த்து இருக்கலாம். குற்றச் சம்பவங்களில் ஈடுபவர்கள் எவ்வித அச்சமும் இன்றி குற்றச் செயல்களை செய்கின்றனர். ஒரு பொம்மை முதலமைச்சர், திறமையற்றவர் ஆட்சி செய்வதே இதற்கு சாட்சியாகும்.கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் துரத்தப்பட்ட சம்பவம் தொடர்கிறது. 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நிகழ்ந்துள்ளது. தமிழகம் கொலை நிறைந்த மாநிலமாக இருக்கிறது. இதை பார்க்கும் பொழுது தமிழகத்தில் மோசமான ஆட்சிக்கு இதுவே சான்று. டெல்லியில் பாஜக வெற்றி பெற்றது என்றால் அங்குள்ள மக்கள் பாஜக விரும்புகிறார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பினால் தான். ஆட்சி மாற்றம் வரும். தமிழகத்தில் விரைவாக ஆட்சி மாற்றம் வர இருக்கிறது. இந்திய கூட்டணிக்கு மக்கள் சமட்டி அடி கொடுத்துள்ளார்கள், இந்தியா கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. எல்லாம் அதிகாரம் நிறைந்தவராக இருக்கிறார்கள், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால், மக்கள் மீது அக்கறை இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற மமதையில் இருந்தனர். இந்த தேர்தல் மூலமாக இந்திய கூட்டணி இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாங்கிய ஓட்டை பார்க்கும் பொழுது மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் இந்திய கூட்டணியை தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றமாநிலத்தில் உள்ளவர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறி இருக்கிறார்கள். இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தான் பொருந்தும் சட்டமன்ற தேர்தலுக்கு பொருந்தாது என்று கூறிவிட்டார்கள். இனி இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பே கிடையாது என்று நினைக்கிறேன் என்றார்.

EPS:

ஈரோடு இடைத்தேர்தலில் களத்தில் யாருமே இல்லையே இது திமுகவிற்கு போலி வெற்றி. இந்த போலி வெற்றியைக் கூட அங்குள்ள வாக்காளர்கள் ஓட்டுகளை; திமுகவினரை போட்டுவிட்டார்கள். அதிமுகவினர் ஓட்டுகளை திமுகவினரை பதிவு செய்துள்ளனர். கள்ள ஓட்டின் மூலமாக அதிக வாக்குகளை பெற்று, அதிக வாக்கு பெற்றதாக மமதையில் உள்ளார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் என்ன நிலைமை ஆகப்போகிறது என்று அந்த காலகட்டத்தில் அதிமுக பதில் சொல்லும். கூட்டணி குறித்த கேள்விக்கு, அதிமுக பலமாக கூட்டணி அமைக்கும் ஆறு மாதம் போன பிறகு தான் கூட்டணி பற்றி கூறமுடியும். எந்த கட்சியுடன் கூட்டணி என்ற கூட்டணி வடிவம் பெறும், கூட்டணி என்பது வாக்குகள் சிதறாமல் அனைத்து வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்று திமுக என்ற எதிரியை வீழ்த்த வேண்டும். அதன் அடிப்படையில் தான் சென்று கொண்டிருக்கிறோம். அதிமுக பொருத்தவரை கூட்டணி வேறு; கொள்கைவேறு. தேர்தல் நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிரிகள் வீழ்த்தற்கு அமைக்கப்படுவது தான் கூட்டணி. தேர்தல் முடிந்த பிறகு அவரவர் கொள்கை படி தான் கட்சி நடத்த முடியும். அதன்படி தான் அதிமுகவும் செயல்படுகிறோம்:தேர்தல் நேரத்தில் வலிமையான கூட்டணி அமைக்கப்படும். தமிழக முதல்வர் தமிழகத்திற்கு அல்வா கொடுத்துக் கொண்டிருக்கிறார். திருநெல்வேலிக்கு சென்று அல்வா சாப்பிட்டுவிட்டு தமிழக மக்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார். 525 அறிவிப்புகள் வெளியிட்டு விட்டு பெரிய அல்வாவாக கிண்டி கொடுத்துவிட்டு போய்விட்டார். பல்வேறு திட்டங்கள் அறிவித்துவிட்டு நிறைய திட்டங்களை அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை அனைத்தும் போலி அறிவிப்புகள். ​ஆட்சிக்கு வந்தவுடன் கடன் கட்டுப்படுத்தப்பட்டு கடன் படிப்படியாக குறைக்கப்படும் அதற்கு நிதி மேலாண்மை குழு அமைக்கப்படும் என்று கூறினார்கள். திமுக எதற்கு மூன்று லட்சத்து, 53 ஆயிரம் கோடி கடன் வாங்கினார்கள் என்று கேள்வி எழுப்பினர். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது வந்த வருவாய் விட, 2024 25 ஆம் ஆண்டு ஆட்சியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி கூடுதலாக வருமானம் வருகிறது. அப்படி இருக்கும்போது என்ன புதிய திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

EPS:

புதிய கல்வி கொள்கை மத்திய அரசு மாநில அரசும் கொண்டிருந்தாலும் கல்வியாளர்களை ஆலோசித்து அறிவித்தால் அனைவரும் ஏற்றுக்கொள்ளலாம் மத்திய அரசும் மாநில அரசும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது மத்திய அரசு மாநில அரசும் ஒவ்வொன்றும் இணைந்து போவதில்லை.

தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் தான் அரசு வேலைகள் தேக்கமடைகிறது. நிதிச் சுமை தான் காரணம் என்றால் திமுக ஆட்சியில் தற்பொழுது இருக்கும் நிதி அளவிற்கு தான் மத்திய அரசு, அதிமுக ஆட்சியிலும் கொடுத்தது அதிமுகவுக்கு எந்தவித சிறப்பு நிதியும் கொடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியில் எவ்வளவு பாக்கியுள்ளதோ அதை நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்து பெற வேண்டும் அவ்வாறு பெறவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது 22 நாட்கள் நாடாளுமன்ற அவையை ஒத்தி வைத்தது அவ்வாறு செய்தால்தான் நிதி கிடைக்கும். பாம்பும் சாகக் கூடாது, தடியும் உடைய கூடாது என்ற பழமொழி போன்று மத்திய அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது நிதியும் கிடைக்க வேண்டுமென்றால் எவ்வாறு கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார். ஈரோடு இடைத்தேர்தலில் மக்களுடைய எண்ணத்தை  பிரதிபலித்து உள்ளார்கள். வாக்களிக்கும் போது மக்களுக்கு என்ன எண்ணம் உள்ளதோ? அதன்படி வாக்களித்து உள்ளார்கள். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை பற்றி பேசியதால் தான் என அதையும், வாக்களித்ததையும் சம்மதம் படுத்தி பேசக்கூடாது. அது தவறு. அது சரியும் அல்ல" என்றும் கூறினார்.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai Vintage bus: கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற கட்டணம் இவ்வளவு தானா.? சிறப்பம்சம் என்ன.?
Iran Trump Russia Warning: ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
ஈரான் போராட்டக்காரர்களை தூண்டிவிட்ட ட்ரம்ப்; எச்சரித்த ரஷ்யா; அப்போ உலகப் போர் தானா.?
Tata Sierra Finance Plan: டாடா சியாரா வாங்க பிளான் பண்றீங்களா.? எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? EMI எவ்வளவு வரும்.?
டாடா சியாரா வாங்க பிளான் பண்றீங்களா.? எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? EMI எவ்வளவு வரும்.?
Maruti Fronx No.1: காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
காம்பேக்ட் SUV பிரிவில் நம்பர் 1; தட்டித் தூக்கிய மாருதி ஃப்ராங்க்ஸ்; டாடா, ஹுண்டாயின் நிலை என்ன.?
Embed widget