தவெகவில் ஆயிரம் செங்கோட்டையன் வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி உறுதி: வீரபாண்டியன் பரபரப்பு பேச்சு!
தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் ஒரு செங்கோட்டையன் இல்லை, ஆயிரம் செங்கோட்டையனை அழைத்து வந்தாலும், சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி - சிபிஐ . வீரபாண்டியன்

விழுப்புரம் : தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் ஒரு செங்கோட்டையன் இல்லை, ஆயிரம் செங்கோட்டையனை அழைத்து வந்தாலும், சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என்றும் அரசியல் சிந்தாந்தம் இல்லாத விஜய் போன்றோவர்களுக்கு பின்னால் செல்பவர்களுக்கு அரசியல் கல்வி அறிவுத்தேவை வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்திலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் மழையால் பாதிக்கப்படும் இடங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரடியாக சென்று உதவிப்பணியில் ஈடுபடுமாறு கட்சியினரை அறிவுறுத்த பட்டுள்ளதாகவும்,தமிழ்நாடு அரசு பணிகளில் உள்ள காலிபணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்,மத்திய அரசு மதுரை, கோவை ரயில் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது.
இதுமக்களுக்கு விரோதமான செயல் என்றும்இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நிலையில் உள்ள பொழுது பாரத பிரதமர் ராமர் கோயிலில் கொடியேற்று நிகழ்வில் கலந்து கொள்வது ஏற்புடையது அல்ல என்று கூறினார்.தமிழக ஆளுநர் எத்தனை தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும்,அரசு பொறுப்பில் இருக்கக்கூடிய ஆளுனர் அரசியல் கட்சியை விமர்சிப்பதை நாங்கள் வரவேற்பதாகவும் போராட்டம் என்பது பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்குமான இதனை அரசு தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது போராட்டங்களுக்கான அனுமதியை எந்தவித தடையும் இல்லாமல் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ரோட்ஷோ பிரதமர் மோடி இங்கு அறிமுகபடுத்தினார். ரோடுஷோவுக்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் இல்லை, கட்சிகள் தான் மாறுகிறதுதமிழ்நாட்டில் வரும் தேர்தலில் யூகங்களை முறியடித்து திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து தான் வருவதாகவும்,மத்திய அரசு தமிழக அரசுக்கு தேவையான நிதி ஒதுக்குவதில்லை ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல மடங்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டினார்.
பாஜகவின் பதற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் தமிழகத்தில் எடுபடாது எனவும் தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் ஒரு செங்கோட்டையன் இல்லை, ஆயிரம் செங்கோட்டையனை அழைத்து வந்தாலும்,பிஜேபி உடன் கூட்டணி வைத்து வந்தாலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எங்கள் திமுக கூட்டணி தான் கொள்கை, பன்பாடு, கலாச்சாரம் சேர்ந்த மக்கள் எங்களோடு இருக்கின்றனர். நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் எனவும்முன்பை விட அதிக எண்ணிக்கையில் வெற்றிப்பெறுவோம் என்று தெரிவித்தார்.
திராவிட கட்சிகள் கருத்துகள் பெரியார் கருத்தியல் அதனால் தான் திமுக உடன் இருக்கிறோம், நாங்கள் பல்லக்கு தூக்கவில்லை, உலக முழுவதும் பல்லக்கு தூக்கியவர்களை முடிவு கட்டியவர்கள் கம்யுனிஸ்ட் கட்சி தான் எனவும் அரசியல் சிந்தாந்தம் இல்லாத விஜய் போன்றோவர்களுக்கு பின்னால் செல்பவர்களுக்கு அரசியல் கல்வி அறிவுத்தேவை என தெரிவித்தார்.





















