'செங்கோட்டையன் பொறுப்பில் இருந்து நீக்கம்’ EPS அதிரடி அறிவிப்பு..!

அதிமுகவில் சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன். இந்நிலையில், செங்கோட்டையனை கட்சியின் அமைப்பு செயலாளர், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டேன் என்பதை உறுதியாக எடப்பாடி பழனிசாமி இதன் மூலம் அறிவித்துள்ளார். இனி யார் இதுபோன்று பேசினாலும் அவர்களுக்கும் இதே கதி என்பதையும் இதன் மூலம் அதிமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் செங்கோட்டையன்
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)






















