TVK vs AIADMK: மீண்டும் அதிமுக கூட்டத்தில் தவெக கொடி.. இபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன்!
TVK vs AIADMK: அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடிகள் பறந்தது பேசுபொருளான நிலையில் இன்றைய கூட்டத்திலும் தவெக கொடிகளுடன் சிலர் பங்கேற்றுள்ளனர்.

TVK vs AIADMK: அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடிகள் பறந்தது பேசுபொருளான நிலையில் இன்றைய கூட்டத்திலும் தவெக கொடிகளுடன் சிலர் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி:
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பல்வேறு கட்சிகளும் தங்களது பிரச்சார பயணத்தை தீவிர படுத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் நேற்று (அக்டோபர் 8) ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த போது அதிமுக - பாஜக கொடிகள் காட்டி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல், அந்த பிரச்சார கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியும் பறந்தது. இதனை பார்த்த இபிஎஸ், “திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். அது வெற்று கூட்டணி.
நாம் தான் வெற்றி கூட்டணி. இதோ பாருங்கள் “கொடி ( தவெக ) பறக்குது.. பிள்ளையார் சுழு போட்டாங்க”என்று கூறினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளானது. கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தை தள்ளி வைத்துள்ள சூழலில் இவ்வாறாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஒரு புறம் அதிமுகவினர் சிலர் தவெக தங்கள் கூட்டணிக்கு வரும் என்றும் மறுபுறம் இது அதிமுகவே செய்திருக்கும் ஏற்பாடு என்று தவெகவினரும் கூறி வருகின்றனர்.
இபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன்:
இந்த நிலையில் தான் தவெக சார்பில் வாய் மொழி உத்தரவாக அதிமுக பிரச்சார கூட்டத்திற்கு தவெகவினர் யாரும் செல்ல கூடாது என்றும் கட்சியின் கொடியை பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியதாக தகவல் வெளியானது.
இச்சூழலில் இன்றைய அதிமுக பிரச்சாரத்திலும் தவெக கொடி பறந்துள்ளது. அதாவது நாமக்கல் மாவாட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு தவெக கொடிகளுடன் மீண்டும் உற்சாக வரவேற்பு
கூட்டணி உறுதி ஆயிடுச்சு 🔥
1000 கொடிகளுடன் த.வெ.க தொண்டர்கள் பங்கேற்பு 😍
தேர்தல் முடிகிற வரைக்கும் இனி உபிஸ் தூங்கவே மாட்டானுங்க 🔥🔥
நாமக்கல்லில் அதிமுக பொதுச் செயலாளருக்கு அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் pic.twitter.com/O38vnlcski
— Gowri Sankar D (@GowriSankarD_) October 9, 2025 class="cf0">அளிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சிம்பிளை காண்பித்த படி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





















