மேலும் அறிய

E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு

E V Velu Explain : சிங்கப்பூருக்கு சென்று ஓடி ஒளிந்து கொண்டதாக முதலமைச்சர் விஜய் கூறியதற்கு , பதிலடி கொடுக்கும் வகையில், சிங்கப்பூர் சென்றது ஏன் என ஆதாரத்தோடு எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

மாஜி அமைச்சர்களுக்கு செக்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்களான எ.வ.வேலு, சிவசங்கர் உள்ளிட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஜூன் 25ஆம் தேதி சோதனை மேற்கொண்டர். இதனையடுத்து நேரில் விசாரணைக்கு ஆஜராக எ.வ.வேலுவிற்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில்,

சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றுள்ளதாகவும் சென்னை திரும்பியதும் விசாரணைக்கு ஆஜராவதாக எ.வ.வேலு தெரிவித்து இருந்தார். இந்த பரபரப்பான சூழலில் முதலமைச்சர் விஜய் கரூர் சென்ற போது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும் போது  திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூர் சென்று ஓடி ஒளிந்து கொண்டுள்ளதாக பேசியிருந்தார்.

ஓடுவது ஒளிவது, பதுங்குவது திமுகவிற்கு இல்லை

இந்த நிலையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை திரும்பினார். விமான நிலையத்திலேயேலஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு பயந்து ஓடி விட்டதாக முதலமைச்சர் கூறியதற்கு பதிலடி கொடுத்தார். செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, ஓடுவது ஒளிவது, பதுங்குவது திமுகவிற்கு இல்லை, திமுக தலைவர்களான கலைஞர், ஸ்டாலின் அப்படி எங்களை வளர்க்கவில்லை, அரசியலை அரசியலாக சந்திப்பதில் திமுக சலித்தது இல்லை.  

எனக்கு இருதய கோளாறு பிரச்சனை தொடர்பாக 2016 மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன்.  2023 ஆம் ஆண்டு மவுண்ட எலிசபெத் மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை மேற்கொண்டேன். தேர்தலுக்கு பிறகு முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் சிங்கப்பூர் சென்றேன்.

சிங்கப்பூர் சென்றது ஏன்.?

சிங்கப்பூரில் மருத்துவ பரிசோதனைக்காக 15 ஆம் தேதி விசாவிற்கு விண்ணப்பித்தேன். ஜூன் 17 ஆம் தேதி விசா வழங்கப்பட்டது. விசா கொடுத்த அன்றைய தினமே இண்டிகோ விமானத்தில் 25 ஆம் தேதி சிங்கப்பூருக்கு மதியம் 2.20க்கு செல்ல டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. 25ஆம் தேதி மாலையில் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்ட நிலையில், காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். மேலும் சோதனை மேற்கொண்டிருந்த அதிகாரி புகழ் வேந்தேன் என்பவரிடம் சிங்கப்பூர் செல்ல டிக்கெட் போட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்திருந்தேன். ஆனால் அன்யை தினம் சிங்கப்பூர் செல்ல முடியாத காரணத்தால் அடுத்த நாள் மீண்டும் டிக்கெட் போட்டு சிங்கப்பூர் சென்றேன். 

சிங்கப்பூரில் என்ன மருத்துவ சிகிச்சை .?

அங்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டது. குறிப்பாக நியூரோ, அலர்ஜி, இருதய பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனக்கு உணவு ஒவ்வாமை பெரிய பிரச்சனையாக இருந்தது. இதற்காக சிகிச்சை எடுத்துகொண்டேன். அடுத்தாக இருதய மருத்துவர், வயிறு தொடர்பான மருத்துவரையும் சந்தித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனவே உனது உடல்நிலை தொடர்பாக அனைத்து மருத்துவ பரிசோதனை அறிக்கையும் என்னிடம் உள்ளது. இந்த சூழலில் 3ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு என் வீட்டு முன் சம்மன் ஒட்டப்பட்டதாக தகவல் வந்தது. உடனே அங்கிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடிதம் எழுதினேன். 10 தினங்கள் அனுமதி கேட்கப்பட்டது. 

15 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவேன்

ஆனால் 9 ஆம் தேதி ஆஜராகும் படி மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. 10 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், 5 நாட்களில் மீண்டும் சம்மன் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தான் மீண்டும் எனது வழக்கறிஞர் மூலமாக 12 ஆம் தேதிக்கு பிறகு எந்த தேதியில் அழைத்தாலும் விசாரணைக்கு தயார் என தெரிவிக்கப்பட்டது. முழு ஒத்துழைப்பு தருகிறோம் என கூறினேன்.

ஆனால் ஒடுகிறார்கள்- பதுங்குகிறார்கள் என பேசுவது அர்த்தமில்லாத செயல். சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணியாக செல்லவில்லை. வழக்கிற்கு அஞ்சி செல்லவில்லை. சமூக வலைதளத்தில் கற்பனையில் தோன்றியதலையெல்லாம் அவிழ்த்து விட்டுள்ளார்கள்.  வருகிற 15 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு ஆஜராவேன் என எ.வே.வேலு தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget