மேலும் அறிய

இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - வைகோ

”இந்தியையும், இந்துத்துவா சக்தியையும் நிலை நாட்டுவதற்கு செயல்பட்டு வரும் சூழலில் மோடியின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது அதற்கு தமிழகம் இடம் தராது - வைகோ”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நடைபெற்ற தனது உதவியாளரான சாரதி பிசி.துரை என்பவரின் இல்ல மணவிழாவில் நேரில் கலந்து கொண்டார். முன்னதாக வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமீபத்தில் போட்டுள்ளார். சொல்லாததையும் செய்து வருகிறேன் என்று அவர் சொல்வதைப் போல சாதித்து வருகிறார். எனவே தமிழகத்தில் கருணாநிதிக்கு பிறகு பொற்கால ஆட்சி நடத்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, தியாகராயர் ஆகியோரால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கோட்டையை ஆதிக்க சக்திகள் சங்பரிவார் சக்திகள் சிதைக்க பார்க்கிறார்கள். இந்தி சமஸ்கிருதத்தை திணித்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - வைகோ

அண்மையில் இந்தூரில் 75 ஆண்டு கால சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் பாஜகவுக்கு பின்னால் இருந்து செயல்படும் சங்பரிவார் அமைப்புகள், இந்துத்துவா அமைப்புகள் ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைக்கார கொடியவன் கோட்சேவின் உருவத்தை வைத்து வாழ்க வாழ்க என முழக்கம் எழுப்பினர். இதைவிட கொடுமை எதுவும் இருக்காது. மகாத்மா காந்தி உலகத்துக்கே வழிகாட்டிய தலைவர் அவரை சுட்டுக்கொன்றவருக்கு விழா எடுக்கும் கூட்டத்தினர் தமிழக உள்பட அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி இந்தி சமஸ்கிருதத்தை திணித்து, மாநில உரிமையும் சிதைக்க முயற்சிக்கின்றனர். எனவே தான் இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.

நம் முன்னோர்கள் நூறாண்டு காலம் ரத்தம் சிந்தி கண்ணீர் சிந்தி உருவாக்கிக் கொடுத்த திராவிட இயக்கக் கோட்டையை பாதுகாப்பதன் மூலம் திராவிட மாடல் ஆட்சியே அதற்கு அரணாக இருக்கும் அதன் மூலம் இந்துத்துவா சக்தியை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த உணர்வோடு தான் தமிழ்நாட்டில் அவர்கள் கால் எடுத்து வைக்க முடியவில்லை. அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் இது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை. கண்ணீரும் வியர்வையும் கொட்டி எழுப்பப்பட்ட அரண் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். நமது பிரதமர் மிக சாதுரியமானவர். மகா கட்டிக்காரர். அவர் இங்கே வந்து திருவள்ளுவரை பாரதியாரை பேசுகிறார். ஆனால் வடக்கே சென்றால் இந்தியில் தான் பேசுகிறார். அவர் இந்தியையும், இந்துத்துவா சக்தியையும் நிலை நாட்டுவதற்கு செயல்பட்டு வரும் சூழலில் மோடியின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது அதற்கு தமிழகம் இடம் தராது என்றார். தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பேசும்போது, துப்பாக்கிச் சூடு நடந்த அன்று நான் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என கதறினார்கள். தற்போது ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது ஒரு படுகொலை என்பது இந்த அறிக்கையே சாட்சியமாகும் என்று வைகோ தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget