Annamalai : திராவிட மாடலா..? தேசிய மாடலா..? விவாதிக்க தயாரா..? முதலமைச்சருக்கு சவால் விட்ட அண்ணாமலை
திராவிட மாடலா? தேசிய மாடலா? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டில் பிஜெபி மாநிலதலைவர் அண்ணாமலை பேட்டி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள கூட்டேரிப்பட்டில் மாவட்ட பிஜெபி சார்பில் கடந்த 20 ஆண்டுகள் மோடி செய்த சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பிஜெபி மாநில தலைவர் அண்ணாமலை திறந்துவைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது,
"ஆளுநர் என்ன கருத்து தெரிவித்தாலும் அது அவருடைய கருத்து, பா.ஜ.க. தலைவர் என்ற முறையில் மட்டுமே நான் கருத்து தெரிவிக்க முடியும். தி.மு.க. 16 மாதங்களில் ஊழல் அரசு என பெயர் வாங்கியுள்ளது. தமிழகத்தில் பெருமளவு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மத்திய அரசின் பல திட்டங்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல சமூக ஆர்வளர்கள் அமைதியாகிவிட்டனர்.
#JUSTIN | திராவிட மாடலா, தேசிய மாடலா: விவாதிக்க தயார் - பாஜ மாநில தலைவர் அண்ணாமலை
— ABP Nadu (@abpnadu) September 24, 2022
https://t.co/wupaoCQKa2 | #Annamalai #MKStalin @mkstalin @annamalai_k pic.twitter.com/PZNIKTfHZf
இந்தியாவில் காப்பர் விலை இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. தற்போது சீனாவில் இருந்து இருக்குமதி செய்யும் நிலைக்கு வந்துவிட்டோம்." என்றார்.
வரலாறு குறித்து என்னோடு விவாதிக்க தயாரா? என அமைச்சர் பொன்முடி பேசியது குறித்த கேள்விக்கு. பிஜெபி தமிழ் மாடலா, திராவிட மாடலா என்பது குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம். திராடவிடம் என்ன என்பது குறித்தும், 70 ஆண்டுகளாக திமுக சாதனை திராவிட மாடல் என கூறுகிறார்கள். அது குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம். திமுகவின் ஊழல் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளோம். பொன்முடி கட்சி தலைவர் இல்லை இருப்பினும், பொன்முடி நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் விவாதிக்க பிஜெபி மாநில துணை தலைவர் ஒருவரை விவாதிக்க தயாராக உள்ளோம்.
On behalf of @bjp4tamilnadu, happy to inaugurate an excellent exhibition in Mailam, Villupuram District on our Hon PM Shri @narendramodi avl’s 8 years of achievements as our PM. This exhibition also contains a complete section dedicated to our Hon PM’s life journey till now.(1/2) pic.twitter.com/Z1fuzXeNnB
— K.Annamalai (@annamalai_k) September 24, 2022
அதே போன்று திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது தயார் என்றாலும் நேரலையில் விவாதிக்க தயாராக உள்ளேன். பிஜெபி கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வ்வீச்சு, கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.க. தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும். தி.மு.க.வில் நான்கு முதல்தர் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதற்கு திமுகவில் நான்கு முதல்தர் இல்லை ஐந்து பேர் என அண்ணாமலை பேட்டி அளித்தார்