மேலும் அறிய

DMK - MDMK Alliance: திமுக உடனான தொகுதி பங்கீடு.. மதிமுக நிர்வாக குழு ஆலோசனை கூட்டம்..

திமுக உடனான கூட்டணியில் மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து மதிமுக தரப்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையோட்டி அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்பூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ், "திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இரண்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்க திமுகவிடம் கேட்டுள்ளோம் என்றார். மேலும் மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சி சின்னத்தில்தான் கண்டிப்பாக போட்டியிடுவோம். மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. இது குறித்து திமுக குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.

தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே 3 கட்டங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்றும், தனி சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். அதன்படி மதிமுக தரப்பில் கோரப்படும் பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் இன்று மதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

"விஜய் அடுத்த பிரதமரா?" ஸ்ரீபெரும்புதூரில் சட்டென பதிலளித்த டி.கே. சிவகுமார்! பரபரப்பு பேட்டி!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget