மேலும் அறிய

Manipur Violence: மணிப்பூர் கலவரம்.. சென்னையில் இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்..!

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் சென்னையில் இன்று அதாவது ஜூலை 23ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர், மத்திய அரசு தடுக்கத் தவறியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று அதாவது ஜூலை 23ஆம் தேதி திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இது தொடர்பாக கடந்த 21ஆம் தேதி வெளியான அறிக்கையில், “பா.ஜ.க.ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு விதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பாஜக அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது.

மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி அவர்கள், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார்.

இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, 23.07.2023 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தொடர்ச்சியாக 24.07:2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்த மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதில், “மணிப்பூரில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான செயல் அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்த நாடு உண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பதட்டமான சூழ்நிலை மற்றும் அமைதி, அதை நிவர்த்தி செய்வதில் மத்திய பாஜக அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடு ஆகியவை மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மணிப்பூரில் வசிப்பவர்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.” என பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்த ஈபிஎஸ், தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்த ஈபிஎஸ், தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP executive cheating: இளம்பெண்களுக்கு மிரட்டல்! சிக்கிய ஆபாச வீடியோக்கள்! பாஜக நிர்வாகி கைதுTirupattur: நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்.. பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ! கள்ளக்காதலன் பகீர்!VJ Siddhu Vlogs: ”அடி.. உதை.. ஆவேசம்” சர்ச்சையில் சிக்கிய VJ சித்து! வெளியான அதிர்ச்சி வீடியோ!செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்த ஈபிஎஸ், தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரை ரகசியமாக சந்தித்த ஈபிஎஸ், தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Thaipusam 2025 Wishes: முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
முருகனுக்கு அரோகரா! டாப் 7 தைப்பூச திருநாள் வாழ்த்து புகைப்படங்கள்...
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
CSE 2025: ஐஏஎஸ் ஆக வேண்டுமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- எப்போது வரை?
Embed widget