பாஜக அராஜக வன்முறை அரசியல் நடத்துகிறது - எம்.பி.ஜோதிமணி
வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து தொடங்கிய நடைபயணம், வெங்கமேடு வழியாக ஏ ஒன் திரையரங்கம் வந்தபின், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை சந்தை வழியாக, மீண்டும் வெங்கமேடு காமராஜர் சிலை அருகில் முடிந்தது.
![பாஜக அராஜக வன்முறை அரசியல் நடத்துகிறது - எம்.பி.ஜோதிமணி BJP runs politics of anarchy and violence said MP Jyotimani TNN பாஜக அராஜக வன்முறை அரசியல் நடத்துகிறது - எம்.பி.ஜோதிமணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/14/bd293ca4b77b9404911ba6ab68113c801660462723932183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நிதி அமைச்சர் தியாகராஜன் மீது நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பாஜக அராஜக, வன்முறை அரசியலை நடத்துகிறது. வீடு தோறும் தேசியக்கொடி என்ற பெயரில் மோடி அரசு போலியான தேசபக்தியை வெளிப்படுத்துவதாக கரூரில் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
கரூரில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் மற்றும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் விலைவாசி உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து, கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்யாகிரக நடைப்பயணம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து தொடங்கிய நடைபயணம், வெங்கமேடு வழியாக ஏ ஒன் திரையரங்கம் வந்தபின், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை சந்தை வழியாக, மீண்டும் வெங்கமேடு காமராஜர் சிலை அருகில் முடிந்தது.
இந்த சத்தியாகிரக நடைபயணத்தில் எம்.பி ஜோதிமணி கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்ரமணியம், வடக்கு மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஸ்டீபன் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எம்.பி ஜோதிமணி, நிதி அமைச்சர் தியாகராஜன் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. பாஜக அருவருக்கத்தக்க, அராஜக, ஆபாச, வன்முறை அரசியலை நடத்துகிறது. மத்திய மோடி அரசு வீடு தோறும் மூவர்ண கொடி என்ற பெயரில் பொதுமக்களை சுரண்டி பிழைக்கிறது. பாஜகவின் தேச பக்தி, போலியான தேச பக்தி என்று கூறினார். இந்த நடைபயண நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)