மேலும் அறிய
இந்தியாவின் தீய சக்தி பாஜக தான் - தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் பா.ஜ.க., வெற்றி பெறாது நெல்லை முபாரக் பேட்டி !
ஏற்கனவே எட்டு தேர்தல்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம், அனுபவம் இருக்கிறது நல்ல முறையில் தேர்தலை சந்திப்போம்.

நெல்லை முபாரக்
Source : whatsapp
2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் - எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மதுரையில் பேட்டி.
நெல்லை முபாரக் செய்தியாளர் சந்திப்பு
ஒவ்வொரு வீட்டிலும் என் வாழ்க்கை என்ற தலைப்பில் எஸ்.பி.பி.ஐ., கட்சியின் சார்பில் மகளிர் அணி மாநாடு மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களிடம் பேசுகையில்...,” 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வீட்டிலும் நம்முடைய வாக்கு என்கிற முழக்கத்தை இந்த மாநாட்டிலே முன் வைத்திருக்கிறார்கள் 2026ல வெல்வோம் என்ற முழக்கத்தை முன்வைத்து இப்பொழுது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பணி செய்து கொண்டிருக்கிற இந்த தருணத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணி மாநாடு நடைபெற்று வருகிறது. வருகிற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும்.
விஜய் அழைத்தால் எஸ்டிபிஐ செல்லுமா என்ற கேள்விக்கு?
எஸ் டி பி ஐ எல்லாவற்றையும் உள்வாங்குகிறோம். நடைபெற இருக்கும் பொதுக்குழுவில் தான் நாங்கள் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். தீய சக்தி என்றால் இந்தியாவிலேயே பாஜக தான் தீய சக்தி. தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறாது தமிழ்நாட்டில் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் தாமரை மலராது அப்படி ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் மலராது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் அறிவாளிகளாக இருக்கிறார்கள். பீகார், குஜராத் என எதுவாக இருந்தாலும் தமிழ்நாடு, தமிழ்நாடு தான். எஸ் டி பி ஐ யின் பொதுக்குழுவில் தான் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். தேர்தலுக்காக நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுப்போம். திருப்பரங்குன்றம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்ற கூடிய பாரம்பரியமாக நடைபெறும் விஷயங்கள் நடக்கட்டும். நீதிமன்றம் மூலமாக சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தக்கூடிய நிலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். திருப்பரங்குன்றத்தில் நாங்கள் மாமன், மச்சான்களாக இருக்கிறோம் என்று அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள்.
நல்ல முறையில் தேர்தலை சந்திப்போம்
மதுரை மண் மாதா நல்லிணக்க மண் அதை பாதுகாக்க வேண்டியது அரசுக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்கு யார் வந்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அனைத்து தர்காவையும் மீட்டெடுப்போம் என்று பேசுபவர்களை சிறையில் அடைக்க வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் தமிழ்நாட்டில் இது எடுபடாது. திருப்பரங்குன்றத்தை மத அடிப்படையில் அணுகுபவர்கள் அனைவருக்கும் இது பின்விளைவை ஏற்படுத்தும். மத நல்லிணக்கத்தை சமூகநீதி சூழலை உள்வாங்கி பேசக்கூடிய கட்சிகளை தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஜனவரி இறுதியில் கூட்டணி குறித்து அறிவிப்போம். தற்போதைய சூழலில் கட்சியை வலுப்படுத்துவதில் தான் எங்கள் நோக்கம் உள்ளது. மக்கள் மக்களின் வாழ் நிலையை உயர்த்தக்கூடிய பிரச்சாரத்தை தான் முன்னெடுப்போம். ஏற்கனவே எட்டு தேர்தல்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம், அனுபவம் இருக்கிறது நல்ல முறையில் தேர்தலை சந்திப்போம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















