மேலும் அறிய

பாஜக தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது, நட்டா பகல் கனவு காண்கிறார் - வைகோ

இந்தியாவின் மத நம்பிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டி மாநிலமாக செயல்படுகிறது

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் முக்கிய பிரமுகரான டேனியல் ஆபிரஹாம் இல்ல திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் சந்திக்கும் போது கூறியதாவது: இந்திய உபகண்டத்தில் பல்வேறு மத நம்பிக்கைகள், பல்வேறு சம்பிரதாயங்கள், பல்வேறு மரபுகள், பல்வேறு மொழிகள் என இருக்கின்றன. இவை அனைத்தையும் புல்டோசர் போட்டு நசுக்குவதை போல் நசுக்கி விட்டு சனாதன சக்திகள் இந்துத்துவா கொள்கையை மட்டும் நிலை நாட்ட வேண்டும் என்று பாஜகவும், ஆர் எஸ் எஸ் அமைப்புகளும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலைமை ஏற்படுமானால் இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து சிதறி போகும். அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். அப்போது தான் சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைத்து நிற்கும். சகோதரத்துவம் வளர்ந்தால் தான் நாட்டில் ஒற்றுமை நிலைபெறும்.

தமிழகத்தில் ஒவ்வொரு மதம் சார்ந்த மக்களும், அவரவர் விருப்பப்படி சடங்குகளை நிகழ்த்தி திருமணங்களை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமையை குலைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி கொள்கை  பின்பற்றி நடைபெறுகிறது. இதை எதிர்த்துப் போராடுகின்ற பெரு சக்தியாக தமிழ்நாடு திகழ்கின்றது. தமிழகத்தில் குறிப்பாக திராவிட மாடல் ஆட்சி நடத்திகின்ற ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஒற்றுமையை ஒருமைபாட்டை நிலை நாட்டுவதற்கு அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்து  இயங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவின் மத நம்பிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டி மாநிலமாக செயல்படுகிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் என சொல்லும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் கருத்து பட்டப் பகலில் காண்கின்ற கனவு ! தமிழ்நாட்டில் அது ஒருபோதும் நடக்காது. தமிழ்நாட்டில் அவர்கள் காலூன்ற முடியாது என்றார். மேலும் பேசிய அவர், 2024 ல் திமுக தலைமையிலான இதே கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும். பெரியார் தொடங்கி பல்வேறு தமிழ் அறிஞர்கள் வளர்த்த இந்த திராவிட இயக்க மண்ணில் பாஜகவின் கொள்கைகள் ஊடுருவ முடியாது. சேது சமுத்திர திட்டம் தேவை என்பதை பேரறிஞர் அண்ணாவே சொன்னார். அதற்காக நான் கடுமையாக  போராடியிருக்கிறேன். அந்த திட்டம் அவசியம். அது தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சிக்கும், தென்னாட்டு வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டம் வழிவகுக்கும். தென் தமிழகத்திற்கு மிகவும் பயனுறுத்திட்டமான செண்பகவல்லி அணைை சீரமைப்பு குறித்து மூன்று முறை கேரள மாநில முதலமைச்சரை சந்தித்தேன். அவர்கள் அதிலுள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டாலும் கூட அதை செயல்படுத்த வராமல் இருக்கிறார்கள். அது வருந்தத்தக்கது. அந்த நிலை மாற வேண்டும். கேரள அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்" என தெரிவித்தார்.


 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget