மேலும் அறிய

திமுகவின் கைகூலியாக மாறி வருகிறார் அண்ணாமலை - வெளுத்து வாங்கிய சிவி சண்முகம்

அண்ணாவைப் பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் அண்ணாமலை எப்போது அரசியலுக்கு வந்தார்? அரசியல் பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் - சிவி சண்முகம்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் அருகில் உள்ள கோலியனூர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
தமிழ்நாட்டை வாழ வைத்தவர்கள் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா. இந்த இருவரும் இன்று இல்லை என்றால் தமிழ்நாடு இல்லை 93% ஆக இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்றைக்கும் கூலி தொழிலாளியாக இருந்திருப்போம்.  இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா, தமிழ்நாடு. தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெற்று உள்ளது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கத்தை தோற்றுவித்த பெரியார் பேரறிஞர் அண்ணா. 
 
வரலாறு தெரியாமல் நேற்று மழையில் பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு புது புது தலைவர்கள் வந்துள்ளார்கள். அண்னாவை தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியுள்ளார் அண்ணாமலை. அண்ணாமாலை வயது நாற்பதுக்கூட ஆகவில்லை. நீங்கள் சொல்லும் சம்பவம் சொல்லும் சம்பவத்திற்கு எந்த ஆதரமும் இல்லை. அடிப்படையும் இல்லை. தன்னை அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு பேசியுள்ளார். திராவிட இயக்கத்தையும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக, வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூதாயத்திற்கு அனைத்து உரிமைகளையும், வாய்ப்புகளையும், பெண்களுக்கு சம உரிமை பெற்றுக்கொடுத்த, தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணாவை குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. 
 
அண்ணாமலை அவர் சார்ந்த பிஜேபி கட்சி. அதிமுக கூட்டணி என அறிவித்துள்ளது. பிரதமர் மோடி எடப்பாடி.பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து அருகில் அமர வைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய கட்சி அதிமுக. இது ஜே பி நட்டா பிரதமர் மோடி அமித்ஷாவுக்கு தெரிந்துள்ளது இது ஏன் அண்ணாமலைக்கு தெரியவில்லை. கூட்டணியில் இருந்து கொண்டே அண்ணாவின் பெயர் உள்ள அதிமுகவையும் அண்ணாவையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்துள்ளார் அண்ணாமலை அண்ணாமலை எங்களுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் இனியும் இந்த போக்கு நீடித்தால், ஏற்கனவே ஜெயலலிதாவை விமர்சனம் செய்துள்ளார் தற்போது அண்ணாவை விமர்சனம் செய்துள்ளார். உங்கள் நோக்கம் என்ன ஒருபுறம் தேசிய தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என விரும்புகிறார்கள் நேற்று முன்தினம் கூட எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு அழைத்து சந்தித்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ள நேரம் பார்த்து திட்டமிட்டு அண்ணாமலை தெரியாமல் பேசவில்லை திட்டமிட்டு அண்ணாவை இழிவுபடுத்தி பேசியுள்ளார்.
 
அண்ணாவைப் பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும் அண்ணாமலை எப்போது அரசியலுக்கு வந்தார் அரசியல் பற்றி அண்ணாமலைக்கு என்ன தெரியும்.  அண்ணாமலையன் எண்ணம் செயல்களை பார்க்கும்போது கூட்டணியில் இருந்து கொண்டே எங்களை விமர்சிப்பது எங்கள் தலைவர்களை விமர்சிப்பதை பார்த்தால் அவருக்கு ஏதோ உள்நோக்கம் வைத்துள்ளார் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறக் கூடாது என்று திட்டமிட்டு திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்கள் என தோன்றுகிறது இங்கே பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பிஜேபி அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் யாருக்கு நன்மை யார் பிரதமராக வேண்டும் இன்றைய பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் மோடி பிரதமராக வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் இதனை பிஜேபி தேசிய தலைமை உணர்ந்துள்ளது அதற்கு அதிமுக துணை இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள் உணர்ந்த காரணத்தினால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதனை கலைக்கு விதமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டுன் என்ற என்னம் அண்ணாமலைக்கு துளியும் இல்லை. மோடி பிரதமர் ஆகவேண்டும் என்ற என்னம் அண்ணாமலைக்கு துளியும் இல்லை. மோடி பிரதமர் ஆகவேண்டும் என்றால் கூட்டணியை ஆதரித்து பேச வேண்டும் ஆனால் திமுகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு அதிமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.
 
ஜெயலலியா, அண்ணாவை விமர்சனம் செய்கிறார் என்றால் அண்ணாமலையின் நோக்கம் என்ன? யாருக்கு மறைமுகமாக அண்ணாமலை உதவுகிறார். நேரடியாக சொல்கிறோம் உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறார். இந்து மதத்தை அழிக்க வேண்டும் என சொல்கிறார்கள். சனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும் என சொல்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை அனைத்து மதமும் சமம். அண்ணா சொன்னது போல் எங்களுக்கு ஒன்றே குளம், ஒருவனே தேவன். திமுக இந்துக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு இந்துக்களையும், சனாதனத்தையும் அழிக்கப்பட வேண்டும் என பேசி வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவை விமர்சிப்பதை விட்டுவிட்டு, சனாதன பிரச்சினையை திசை திருப்பும்விதமாக திமுகவுக்கு உதவுகின்ற விதமாக சம்ந்தம் இல்லாமல். அண்ணா பேசாத ஒன்றை பேசியதாக சொல்லி அண்ணாவை இழிவுபடுத்துகிறார் அண்ணாமலை அப்படியென்றால் உங்கள் நோக்கம் என்ன, திமுகவின் கைகூலியாக அண்ணாமலை மாறி வருகிறார்.
 
அண்ணாமலை தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அண்ணா குறித்த பேச வேண்டிய தேவை என்ன. அண்ணாமலை பாதயாத்திரை போனார். அது பாதயாத்திரையா, வசூல் யாத்திரையா என தெரியவில்லை. அது குறித்து எந்த ஊடகமும் பேசவில்லை. திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் அண்ணாமலை ஆகிவிட்டார். அதனால் தன் இருப்பை காட்டிக்கொள்ளவதற்காக. நானும் தமிழ்நாட்டில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ளவ்நானும் ரவுடிதான் என காட்டிக்கொள்ள அண்ணாவை இழிவுப்படுத்தக்கூடாது. இனியும் அதிமுக தொண்டர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் இறுதி எச்சரிக்கையாக சொல்கிறோம். ஐபிஎஸ் படித்துவிட்டோம் என்ற திமிரிலும், ஆனவத்திலும் பேசக்கூடாது. இறந்துவிட்ட ஒருதலைவரை மறியாதையாக பேச கற்றுக்கொளள வேண்டும். சேற்றை வாரி பூசாதீர்கள். கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
 
இதனை தேசிய தலைமை கண்கானிக்க வேண்டும். இல்லை என்றால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை. அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் மோடி பிரதமராக வருவார் இல்லை என்றால் அதிமுகவுக்கு எந்த நட்டமும் இல்லை. உங்களுக்கு 2026ல் தான் போட்டி, தற்போது வரப்போது பிரன்லி மேட்ச் தான். கூட்டணி தற்மத்திற்காக உரைப்போம். ஏன் என்றால் திமுக மக்கள் விரோத அரசு. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று மக்களை வஞ்சித்து வரும் அரசு. குறிப்பாக தாய்மார்களை பழிவாங்கி வரும் அரசு இது அகற்றப்பட வேண்டும் அதற்கு முன்னோட்டமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்கடிப்பட வேண்டும். அதற்காக திமுகவுக்கு எதிராக உள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளதும் பிஜெபி தலைமை அதிமுகவை ஏற்றுக்கொண்டுள்ளது.
 
அதிமுகவும் பிஜேபி தேசிய தலைமையை ஏற்று செயல்பட்டு வருகிறோம். ஆனால் பிஜேபியில் ஒரு மணிதர் இந்த கூட்டணியை முறிக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறார. அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். இதே போல் அண்ணாமலை தொடர்ந்து பேசி வந்தால், இதற்கு ஒரு முடிவை எங்கள் அதிமுக தலைமை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவோம். இதற்கு ஒரு முடிகட்டப்பட வேண்டும். அண்ணாமலையின் தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பதில் தாக்குதல் கொடுக்க வேண்டும் என தலைமைக்கு வலியுதுத்துவோம். அண்ணாமலை சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க திமுக போல் அடிமையில்லை என பேசினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Embed widget