மேலும் அறிய

“விஜய்க்கு இதை யாராவது சொல்லி கொடுங்கள்” - அண்ணாமலை எதற்காக அப்படி சொன்னார்?

எம்.பிக்கள் என்றால் என்னவென்று விஜய்க்கு யாராவது சொல்லி கொடுங்கள் - விஜய்யின் அறிக்கைக்கு அண்ணாமலை விமர்சனம்

1 கோடி பேரிடம் கையெழுத்து

மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கியது. தமிழ்நாடு பாஜக சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் கையெழுத்து இயக்கத்துடன் 'சமக்கல்வி - எங்கள் உரிமை' என்கிற இணையத்தளத்தையும், பாடலையும் வெளியிட்டது. Puthiyakalvi.in எனும் இணையதளத்தை பாஜக மூத்த தலைவர் பொன். இராதா கிருஷ்ணன், சமக்கல்வி எங்கள் உரிமை என்ற பாடலை பாஜக முத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் கையெழுத்து இயக்கத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

சமக் கல்வி எங்கள் உரிமை இணையதளம் 6 மொழிகளில் உள்ளது. மாற்று மொழி பேசுபவர்கள் கூட தமிழகத்தில் உள்ளனர். எனவே எந்த மொழியில் வேண்டுமானாலும் சென்று Digital Signature போட்டுக் கொள்ளலாம். மே மாதம் இறுதிக்குள் 1 கோடி கையெழுத்து வாங்கிய பின்னர் ஜனாதிபதி அவர்களை நேரில் சந்தித்து கொடுக்க உள்ளோம். இது தொடர்பாக வரும் மார்ச் 21 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி அடுத்தடுத்து பாஜகவின் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

முதல்வரே முடிவை மாற்றி கொள்வார்

தமிழகத்தின் அனைத்து பாஜக மண்டல்கள் இருக்கும் இடங்களிலும் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் குரலாக இந்த பொதுக் கூட்டத்திற்கு வரும் மக்களை பார்த்து, முதல்வர் அவர்களே தனது மனதை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இது அரசியல் ரீதியான போட்டி இல்லை, மக்களின் எண்ணங்களுக்கு நேர்மறையாக உள்ளதால் மக்களின் எதிர்காலத்திற்காக இந்த இயக்கம் செயல்படுத்தப் படுகிறது. மே 2026 இல் புதிய ஆட்சி இங்கே வரும்போது புதிய கல்விக் கொள்கை இங்கே அமல்படுத்த பட வேண்டும் என அவர் பேசினார்.

எதற்காக அனைத்து கட்சி கூட்டம்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் அமமுக சார்பாக பங்கேற்றவர்கள் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசவில்லை, பின் எதற்கு இந்த கூட்டம் என கேள்வி எழுப்பி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை நிலைபாடு மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதே. ஆனால் எங்களுக்கு இன்னும் புரியவில்லை , எதற்காக இந்த அனைத்துக் கட்சி கூட்டம்?

இந்தி கூட்டணியில் உள்ள ராகுல்காந்தி ஒரு போன் அழைத்து இருந்தால் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல்வருக்கு 848 என்று யார் சொன்னால் ? அந்த தகவலை யார் சொன்னார்கள் என சொல்லி இருந்தால் கூட எங்கள் தலைவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்று இருப்பார்கள் என அவர் பேசினார்.

முதல்வர் செயல்பாடு - நக்சலைட்டுகள் போல் உள்ளது

முதல்வரின் செயல்பாடுகள் நக்சலைட்டுகள் போல தான் உள்ளது. பொறுப்பான ஒரு முறையில் அவர் செயல்படவில்லை. அவர் மத்திய அரசின் மீது நக்சல்கள் கிளர்ச்சி ஏற்படுத்துவது போல செயல்பட்டு கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளது, அதை எல்லாம் விட்டுவிட்டு சம்மந்தமே இல்லாமல் ஒன்றை பேசி வருகிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளது

NCRD 2022 Data பொறுத்த வரை 8.1 சதவிகிதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இது 2021 ஐ ஒப்பிடும் போது அடிப்படையில் பெண்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை அதிகரித்து வருவதற்கு சான்றாக உள்ளது.

தேமுதிக, அதிமுக இடையேயான பிரச்னை குறித்து கேட்டதற்கு ,

இரு கட்சிகளின் முடிவுகள் அவர்களை சார்ந்தது, எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. நேற்று அமமுக சார்பில் தினகரன் அவர்களை ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும் போது 2026 இல் கூட்டணி தொடரும் என கூறி இருந்தார். எங்களை பொறுத்தவரை அதிமுக உடன் நாங்கள் மறைமுகமாக பேசவில்லை. அதிமுக இப்போது எதிர்கட்சியாக உள்ளனர் , எடப்பாடி பழனிசாமி ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் வைக்க வேண்டும் என பேசி வருகிறார். நேரமும், காலமும் வரும் போது இது குறித்து நாங்கள் பேசுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த தலைவர்கள் இருப்பார்கள் என்பது குறித்து தேர்தல் நெருங்கும் போது முடிவெடுக்கப்படும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் அதிகாரப் பூர்வமாக இந்தி மொழியில் பதிவு செய்யபட்டு கொண்டு வரப்படுகிறது. அதை ஏன் தமிழில் அல்லது மற்ற மொழிகளில் கொண்டு வரக்கூடாது என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ;

தமிழ்நாடு முதல்வர் பிரதமரின் திட்டங்களை காப்பி அடித்து தனது திட்டமாக செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசு தமிழில் பெயர் வைத்து வந்துள்ள செல்வமகள் சேமிப்பு திட்டம் , விவசாயிகள் கடன்  உரிமைத் திட்டம் ஆகியவற்றை ஏன் பிரபலப் படுத்தவில்லை , முக்கியத்துவம் வழங்கவில்லை ? காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கூட இவ்வாறு தான் செய்தார்கள்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் அழைக்கப்பட்ட திமுக , திக உட்பட 45 கட்சிகளுக்கும் பாஜக கடிதம் எழுத உள்ளோம்.

வரிசையமைப்பு தொடர்பாக அவர்களது சந்தேகங்களுக்கு அனைத்து கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர்கள் விளக்கம் கொடுக்க உள்ளனர்.. அவர்களுக்கு உண்மையில் ஏதாவது குழப்பம் இருக்கிறதா? என அவர்களின் சந்தேகங்களை தீர்க உள்ளோம். நாளை, நாளை மறுநாள் ஒவ்வொரு கட்சிக்கும் கடிதம் எழுத உள்ளோம். திராவிட கழகமாக இருந்தாலும் அவர்களை நேரில் சந்தித்து இது குறித்து விளக்க உள்ளோம்.

நான் நினைக்கிறேன், திமுக எம் பிக்கள் பாராளுமன்றத்தில் ஒவ்வொரு இருக்கைகளாக எண்ணி எண்ணி 848 என சொல்லி இருப்பார்கள் போல , பழைய பாராளுமன்ற கட்டிடம் 100 வருடம் பழமையானது. இந்த புதிய பாராளுமன்ற கட்டிடம் பெரிய அளவில் அடுத்த கட்டத்திற்கு தான் கட்ட வேண்டும். அதில் உள்ள இருக்கைகளை எண்ணி கூறுவது என்ன என்று தெரியவில்லை.

நடிகர் விஜய்க்கு யாராவது சொல்லி கொடுங்கள்

அடுத்த படியாக கமல்ஹாசன் குறித்து பேசிய அண்ணாமலை,  கமல் அவரது ராஜ்யசபா சீட்டை இன்றே உறுதி செய்து விட்டார். அவருக்கு பாஜக சார்பில் வாழ்த்துக்கள். அடுத்ததாக தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விஜயின் அறிக்கைக்கு, எம்.பி.க்கள் என்றால் என்ன என்பதை விஜய்க்கு யாராவது சொல்லி கொடுங்கள் என விமர்சித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
இபிஎஸ் வைத்த நிபந்தனைகள்! உறுதியளித்த அமித்ஷா! டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை!
Trump Changes Election Rules: பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
பலே கில்லாடி மா நீ.. அமெரிக்க தேர்தல் விதிமுறைகளை மாற்றி ட்ரம்ப் அதிரடி...
Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில நபர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை! நள்ளிரவில் பரபரப்பு
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
சமஸ்கிருத கேள்விகள்! சக மாணவியை அடிக்க சொன்ன பள்ளி ஆசிரியை! அதிரடி காட்டிய போலீஸ்
Karuppasamy Pandian Death: அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைவு...
ரூ.25  லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
ரூ.25 லட்சம் புஸ்....! கட்டும்போதே சரிந்து விழுந்த நிழற்குடை... சிக்கலில் சிக்கிய திமுக எம்எல்ஏ
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
Embed widget