காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
வயதில் பெரியவர் என்பதால் முதல்வர் ஸ்டாலின் , விஜய்யை ஒருமையில் பேசியதில் தவறில்லை எனவும் விஜய் கட்சியில் சேருபவர்கள், சீமானின் கட்சியிலிருந்து தான் சேருவார்கள்
ராதாரவி தலைமையில் இயங்கும் தென்னிந்திய திரைப்பட டப்பிங் சங்கத்தில் பல முறைகேடுகள் இருப்பதாக கூறி நடிகர் எஸ்.வி சேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ;
தென்னிந்திய திரைப்பட டப்பிங் சங்கம் 1981 க்கு பிறகு ராதாரவி தலைமையில் 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலிருந்தே ராதாரவிக்கு டப்பிங் சங்கத்தில் யாரேனும் ஒத்துவரவில்லை என்றால் அவர்களை நீக்கி விடுவார் அல்லது ஏதாவது நடவடிக்கை எடுப்பார். கொரோனாவில் சங்கத்திற்கு வழங்கிய பணத்தை முழுமையாக செலவு செய்யாமல் நன்றி கெட்டவராக ராதாரவி விளங்கி வருகிறார்.
என்ன பிரச்சனை என்றால் ஆரம்பத்தில் அது ஒரு டப்பிங் சங்கம் என்றனர். பின்னர் டப்பிங் மற்றும் நடிகர்கள் சங்கம் என்று மாற்றினார்கள். அதன் பின்னர் சின்னத்திரை டப்பிங் சின்னத்திரை நடிகர்கள் சங்கம் என்று மாற்றினார்கள் ஒவ்வொரு முறையும் பெயரை மாற்றி கொண்டு வருகிறார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் யூனியன் தொடங்கினோம். ராதா ரவி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அரசை எதிர்த்து பேசி வருகிறார். டப்பிங் கட்டிடத்தை திமுக அரசு இடித்தாக கூறி ராதாரவி அரசியல் செய்து வருகிறார்.
இதற்காக ராதாரவி மீது புகார் அளிக்க நாளை தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். தொடர்ந்து மனித உரிமை ஆணையத்திடமும் புகார் அளிக்க உள்ளோம். ஆட்சி சரியாக இருந்தாலும், அமைச்சர் சரியாக இருந்தாலும் அதிகாரிகள் சரியாக இல்லை என்றால் அரசுக்கு கெட்ட பெயர் உண்டாகும்.
டப்பிங் யூனியனில் தேவையில்லாதவர்களை உறுப்பினர்கள் ஆக்கி சங்க தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென அங்கீகாரம் அளித்து வைத்துள்ளார்கள். என் மீது அரசியலிலும் சரி எங்கேயும் சரி ஊழல் குற்றச்சாட்டுகள் கிடையாது , தவறு செய்த யூனியன் சங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாளை தொழிலாளர் நலத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளோம்.
என தெரிவித்தார்.
நான் பாஜக - வில் இல்லை
நீங்கள் பாஜகவில் உள்ளீர்களா என்ற கேள்விக்கு, நான் பாஜகவில் இல்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா புகைப்படம், கலைஞர் கருணாநிதி புகைப்படம் என எல்லாருடைய புகைப்படமும் என் வீட்டில் இருக்கும். பிரதமர் மோடியோடு எடுத்த புகைப்படம் வீட்டில் உள்ளதால் நான் பாஜகவில் இருக்கிறேன் என நினைத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்தார்.
அண்ணாமலை அரசியலுக்கே தகுதியில்லாதவர்
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயால் தாக்கம் இருக்கும் . அண்ணாமலை அரசியலுக்கே தகுதியில்லாதவர்.
தமிழகத்தில் ஒரு பிராமணர் கூட இல்லாமல் அனைவரையும் ஒழித்து கட்டியது அண்ணாமலை. பிராமணர்களுக்கு பாதுகாப்பு இல்லை என தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது. அரசியலில் பணம் வாங்காமல் இருந்தது நான் மட்டுமே. திமுகவை திட்டிக் கொண்டே இருந்தால் மட்டும் பாஜகவால் வளர முடியாது என தெரிவித்தார்.
ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இப்போது மீண்டும் படிக்க சென்று இருப்பதாக கூறுகிறார். பாஜக தலைவராக மட்டுமல்ல, அரசியலுக்கே அண்ணாமலை தகுதியற்றவர் எனவும் தெலுங்கு பேசுபவர்களை பற்றி கஸ்தூரி பேசியது மிகவும் கண்டிக்க தக்க வேண்டிய செயல் என தெரிவித்தார்.
பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு - 2026 ல் பிரச்சாரம்
எந்த கட்சி பிராமணர்களுக்கு நலவாரியம் , இட ஒதுக்கீடு என அறிவிப்புகளை அறிவிக்கிறார்களோ அவர்களுக்காக 2026 இல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இனி தமிழ்நாட்டின் பிரசாந்த் கிஷோராக நான் இருப்பேன். பள்ளிக் கூடங்களில் என்னைக்கு சாதியை எடுக்கிறார்களோ அன்னைக்கு தான் சாதிய கொடுமைகளை தடுக்க முடியும்.
சீமான் கட்சி To விஜய் கட்சி
வயதில் பெரியவர் என்பதால் முதல்வர் ஸ்டாலின் , விஜய்யை ஒருமையில் பேசியதில் தவறில்லை. விஜய் கட்சியில் சேருபவர்கள், சீமானின் கட்சியிலிருந்து தான் சேருவார்கள் எனவும் தெரிவித்தார்.