மேலும் அறிய

தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த ஜெ., பற்றி அறியாமையில் பேசி வருகிறார் அண்ணாமலை - தினகரன் விமர்சனம்

30 ஆண்டு காலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக, இருந்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: 30 ஆண்டு காலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக, இருந்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். தமிழக அரசியல் வரலாறு, ஜெயலலிதா என்னும் ஆளுமை பற்றி எல்லாம் கொஞ்சம் கூட தெரியாமல், வாய்க்கு வந்ததை அண்ணாமலை பேசி வருகிறார். கடந்த 91-96ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா மீது 49 வழக்குகள் போட்டனர். அதையெல்லாம் அவர் தவிடு பொடியாக்கினார்.

இந்திய அளவில் நடந்த சதியினால் தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலங்களில் பாஜக காலூன்றுவதற்கு, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயலலிதா என்பதை மறந்து விட்டு அண்ணாமலை பேசி வருகிறார்.

வாஜ்பாய், அத்வானி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஜெயலலிதாவிடம் அன்பாக பழகினார்கள். மதர் தெரசா போன்றவர்கள் கூட ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டி உள்ளனர். குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டத்திற்காக, மதர் தெரசா வீட்டிற்கு வந்து நேரடியாக ஜெயலலிதாவை பாராட்டி விட்டு சென்றார். அதேபோல ஜெயலலிதா பெண்கள்  முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்கள் வளர்ச்சிக்காகவும், மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காகவும் விவசாயிகளுக்காகவும், 69% இட ஒதுக்கீட்டை பின்தங்கிய மக்களுக்காக பெற்றுத் தந்தவர்.

அவரது 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையின் சாதனையை கண்டு தான், காழ்புணர்ச்சியால் வழக்கு போட்டனர். ஜெயலலிதா மரணம் அடையும்வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. 30 ஆண்டு காலம் தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக, இருந்தவர் ஜெயலலிதா. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசி வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது.

ஏற்கனவே அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. விசாரணையின் அடுத்த கட்டமாக அவர் வீட்டிற்கு ரெய்டு வந்துள்ளனர். மருத்துவ பொது கலந்தாய்வு அறிவிப்பினை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். அந்தந்த மாநிலங்களில் உள்ள மாணவர்கள், அதே மாநிலத்தில் படிப்பது தான் வசதியாக இருக்கும். எனவே, பழைய நடைமுறையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். இதனை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் அது போன்ற திட்டங்களை அனுமதிக்க கூடாது.

அமைச்சர் துரைமுருகன் பொதுப்பணி துறையில் நீண்ட நாள் அனுபவம் உள்ளவர். தமிழக முதல்வர் எந்த காரணத்தைக் கொண்டும், விவசாயிகள் மற்றும் ஜீவாதார பிரச்சனை என்பதால் பின் வாங்காமல், தண்ணீரை கேட்டு பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா என்றால் கூட யார் எனக் கூட கேட்பார்.நான் உருவாக்கியவர் அவர். ஜெயலலிதாவை விட நான் சீனியர் எனக் கூட எடப்பாடி பழனிச்சாமி சொல்லுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
Fengal Cyclone LIVE: சென்னையில் நவ 29, 30ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு - பிரதீப் ஜான்
Embed widget