மேலும் அறிய

அறிவியல் ரீதியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் - செல்வ பெருந்தகை

நாளைக்கே சந்திரபாபு நாயுடு , நிதிஷ்குமார் தன்னுடைய ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் மோடி அரசு கவிழும் அப்போது எல்லா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்துவார்களா ? - செல்வப்பெருந்தகை

மாநில செயற்குழு கூட்டம் 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு கூட்டமானது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. மேலும் சத்தியமூர்த்தி பவனில் புதுப்பிக்கப்பட்ட ராஜிவ்காந்தி அரங்கத்தின் திறப்பு விழாவும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கூட்டமும், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கிற கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு சூரஜ் எம்.என். ஹெக்டே மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் இ வி கே சிலம்பம் கே எஸ் அழகிரி கே வி தங்கபாலு கிருஷ்ணசாமி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழு பொருளாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் உள்ளிட்ட மூத்த மற்றும் முன்னாள் மாநில தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

இந்த மாநில செயற் குழுக்கூட்டதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் , 

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் பாஜக விஸ்வ ஹிந்து பரிட்சத், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கடும் சொற்களை பயன்படுத்தி வருகின்றனர். மோடிக்கு எதிராக சமூக வலைதளத்தில் பேசினாலோ, எழுதினாலோ கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பேன் என்று பேசிய பாஜக எம்எல்ஏ வை கண்டிக்கவில்லை. அவரை நீக்கவும் இல்லை. எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. கிரிமினல்கள் பேசுவதை விட மோசமானதாக பாஜகவினரின் பேச்சு உள்ளது. அவர்களை கடுமையாக கண்டிக்கிறோம். கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் எங்கள் தலைவர்களின் பாதுகாப்பில் மிக கவனமாக இருக்கிறோம். காங்கிரஸின் சித்தாந்தத்தை பாதுகாப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே ; 

பாஜகவினர் பேசுவது வெட்ககரமானது. ஒரு சின்ன விமர்சனத்தை வைத்தால் கூட, கடுமையான எதிர்வினை ஆற்றுகின்றனர். ராகுல் காந்திக்கு எதிராக பேசியவரை கண்டிக்கவோ அல்லது சட்டப்படி அவர் வகிக்கும் பதவியை நீக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர் , 

இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு கூட்டம், மாநில நிர்வாகிகள் கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், அணி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜாய்குமார் மற்றும்  அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.  இன்று காலை நடைபெற்ற செயற்குழுவில் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

சஞ்சய் கெய்வாட் என்பவர் கடினமான தேச விரோத சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். எங்கள் தலைவருக்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு தேசத்துக்கு எதிராக உரையாற்றி இருக்கிறார்.  இதை கண்டித்தும் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச் ராஜாவை கண்டித்தும் சத்தியமூர்த்தி பவன் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள இருக்கிறோம். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கண்டனத்தை தெரிவித்ததற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மாவட்ட வாரியாக எச் ராஜா மீதும் சஞ்சய் கெய்வாட் மீதும் புகார்கள் அளித்து இருக்கிறார்கள்.  முதலமைச்சருக்கு வேண்டுகோள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்களை கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கனவே நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைத்து அதை பரிந்துரை செய்திருக்கிறார்கள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை. ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த வாய்ப்பே கிடையாது. ஒரு நாடு ஒரு தேர்தல் ஒரு கொடி  ஒரு மொழி ஒரு அதிபர் இதுதான் பாஜக சித்தாந்தம். இதை  இந்திய மக்கள் தோற்கடிப்பார்கள். ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

நாளைக்கு சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் தன்னுடைய ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் மோடி அரசு கவிழும் வாய்ப்பு இருக்கும் கவிழ்ந்து போனால் எல்லாம் மாநிலத்திற்கும் தேர்தல் நடத்துவீர்களா ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை இதை கடுமையாக எதிர்க்கிறோம். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். யார் பேசினால் நமக்கு என்ன என தெரிவித்தார். முதல் முதல் காங்கிரஸ்தான் மதுவிலக்கை அமல் படுத்தியது.  இப்போது பல குரல்கள் வரலாம் குமரி ஆனந்தன் பல ஆயிரம் மைல்கள் மதுவிலக்குக்காக நடைபயணம் மேற்கொண்டவர்.

காமராஜர் ஆட்சி என்பது எங்கள் கொள்கை இன்றைக்கு இல்லை என்றைக்கு ஒரு நாள் வரும் அதற்கான கட்டமைப்பை வழிபடுத்த வேண்டும் என சொல்கிறேன். ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி அரசியல் கட்சி பேசினால் எண்ணை ஊற்றி ஆளம் பார்த்து கண்டுபிடிக்க கூடிய பத்திரிகையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என கூறினார். 

உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அதை பார்த்துக் கொள்வோம். அறிவியல் ரீதியாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.  விஞ்ஞான ரீதியாக மக்களுக்கும் பாதிப்பு வராமல் குடிகார சங்கங்களுக்கும் பாதிக்க வரக்கூடாது என தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் பலமுறை பேசி இருக்கிறோம்.  இது எல்லாம் அவதூறு என அமைச்சர் முத்துசாமி சொல்லி இருக்கிறார். தவறான தகவலை பத்திரிகையில் எழுதுகிறார்கள். ஆறு மணிக்கு சாராயம் கொடுப்பதில்லை என சொல்லி இருக்கிறார். 

பெரியார் சிலைக்கு விஜய் சென்றிருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget