மேலும் அறிய
எய்ம்ஸ் செங்கலை தூக்கிய உதயநிதி கச்சத்தீவில் மண் எடுத்து வரணும்; விஜயபிரபாகரன்
எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை தூக்கி வந்த உதயநிதி ஸ்டாலின், கச்சத்தீவு மணலை எடுத்து வர முடியுமா என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
துவரங்குறிச்சி மற்றும் வையம்பட்டி பகுதியில் அமமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‛எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து அதிமுகவிடம் அருமையான கேள்வியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்கிறார்.
நல்ல கேள்வி தான்,’ என பாராட்டிய விஜய பிரபாகரன், ‛கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மணலை உதயநிதி எடுத்து வர முடியுமா,’ என, கேள்வி எழுப்பினார். தன் மீது குறையை வைத்துக் கொண்டு மற்றவர்களை பற்றி கேள்வி கேட்கிறார்கள், என உதயநிதியை சாடிய அவர், அமமுக-தேமுதிக கூட்டணி துரோகத்தால் உருவான கூட்டணி என்றும், அதிமுகவின் உண்மை தொண்டர்கள் அமமுகவில் இருப்பதால் கூட்டணி அமைத்திருப்பதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion