மேலும் அறிய
Madurai ; வீடியோ வெளியிட்டது யாருக்காக? கூகுளில் பார்த்து சொல்கிறேன்.. ஆர்.பி.உதயகுமார் சொல்வது என்ன?
RB Udhayakumar : ஒ.பி.ரவீந்திரநாத் குறித்த கேள்விக்கு அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை, கூகுளில் பார்த்து சொல்கிறேன் -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ஆர்.பி.உதயகுமார்
Source : whats app
ஒ.பி.ரவீந்திரநாத் குறித்த கேள்விக்கு அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை கூகுளில் பார்த்து சொல்கிறேன். -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
ஒரே எதிரி குடும்ப ஆட்சி நடத்துகிற கருணாநிதி ஸ்டாலின்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலத்தில் உள்ள அம்மா கோயிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்...,” இன்று அ.தி.மு.கவை பார்த்து தி.மு.க., மிறல்கிராகள் என்று சொன்னால் அது அம்மாவும், புரட்சித்தலைவரும் வழிவகுத்தது. நாளை அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். ஒருபுறம் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, மற்றொருபுறம் விலைவாசி விண்ணைத் தொடுகிறது. அம்மா பேரவை தொண்டர் படை வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து தென்னை பிரச்சாரம் நாளை முதல் தொடங்க இருக்கிறது. இது தொடர்பாகத்தான் காலை வீடியோ வெளியிட்டேன் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ அல்ல. யாருக்கும் பதில் சொல்வதற்காக இந்த வீடியோ வெளியிடப்படவில்லை. அதில் யாரு பேரையும் குறிப்பிடவும் உச்சரிக்கவும் இல்லை எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக உழைக்க வேண்டும். யார் யாரோ எது எதுவோ சொல்கிறார்கள் அதற்கு பதில் சொல்ல எனக்கு நேரமும் இல்லை அனுமதியும் இல்லை. நமது ஒரே எதிரி குடும்ப ஆட்சி நடத்துகிற கருணாநிதி ஸ்டாலின்.
அது குறித்து நாங்கள் பேச வேண்டியதில்லை
ஒரு கட்சி விவகாரங்களை விசாரிப்பது தான் அவர்கள் வேலையா. அது பிரகாரம் 15 தான் சண்முகம் கூறினார், அதன் பிரகாரம் எந்தவித பெண்டிங்கும் இல்லை. எங்கள் சின்னத்தை வைத்து கடந்த முறையை வரை இந்த முறை இரண்டு சதவீத வாக்குகள் அதிகம் பெற்றோம் அது எங்கள் தலைவர் எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றி. செங்கோட்டையனின் சீனியாரிட்டியை மதிக்கிறோம். அதனால் தான் அவர்கள் கருத்துக்கு நாங்கள் மறுத்துக் கூறவில்லை. இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டவர்கள் குறித்து பதில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை பொருத்தவரை அவர் அந்த பகுதியில் வாழ்ந்து வருபவர். அம்மாவின் தூதுவராக தான் அவர் சென்றார் அதனால் இந்த புகழ் எல்லாம் அம்மாவுக்கும், புரட்சித்தலைவருக்கும் தான். அதை மூத்தவர் என்கிற முறையில் சுட்டிக்காட்டா அவருக்கு உரிமை உண்டு அதை சுட்டி காட்டியதால் சர்ச்சைகள் எழந்துள்ளது. அது குறித்து நாங்கள் பேச வேண்டியதில்லை அவருக்கு தெரியாதது இல்லை.
உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்
எடப்பாடியாரை எந்தவித குற்றமும் சொல்ல முடியவில்லை. சுட்டிக்காட்டி இருக்கிறார்கள் அதற்கு அந்தக் குழு சம்பத், கணேசன் விளக்கத்தை சொல்லி விட்டார்கள். 90 சதவீதம் அவர் முயற்சி இருந்ததால் அவரை சொன்னால் அனைவரையும் சொன்னதைப் போல என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். எல்லா இடத்திலும் நமக்கு வரவேற்பு இருக்காது. அப்போது மனக்குறை வரும்போது தலைமை இடத்தில் முன்வைப்போம் அவர்கள் முடிவெடுப்பார்கள். மிகப்பெரிய உழைப்பாளி கட்சி விசுவாசி அவர் தென்பாண்டி மண்ணை சேர்ந்த கட்சிக்கான உழைப்பாளி உள்ளரங்கிற்குள் நடந்த கூட்டம் அதை நீங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்.
இரட்டை இலை தேர்தலின் போது முடக்கப்படுவதற்கான சூழல் குறித்த கேள்விக்கு:
கட்சியின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்கள் இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். அம்மா புரட்சித்தலைவரின் வடிவில் எடப்பாடியார் தான் எங்களுக்கு கடவுள். அம்மா புரட்சித்தலைவரின் ஆன்மா இணைந்து எடப்பாடியார் ஆன்மாவுடன் உள்ளது யாராலும் இந்த கட்சியை வீழ்த்த முடியாது. 2011 இல் நான் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் இத்தனை சேனல்களுக்கு அனுமதி வழங்கினோம். இப்போது இவ்வளவு சேனல்களுக்குள் ஆரோக்கியமான போட்டி உள்ளது. ஏன் போட்டி வருகிறது என்று கேள்வி கேட்க முடியாது. இப்போது நீங்கள் சேனல் வாங்க முடியாது, படம் வெளியிட முடியாது, இடம் வாங்கி வீடு கட்ட முடியாது. மரியாதைக்குரிய அண்ணன் செங்கோட்டையன் அவர்களையும், வேறு யாரையுமே குறிப்பிடவில்லை.
ஓ.பி.ரவீந்திரநாத் குறித்த கேள்விக்கு
அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை கூகுளில் பார்த்து சொல்கிறேன் எனக் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
சென்னை
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion