மேலும் அறிய

AIADMK Meeting: ஜூலை 11-ல் அடுத்த பொதுக்குழு: அதிமுகவில் அடுக்கடுக்காய் அதிரடிகள்!

ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அடுத்த அதிமுக பொதுக்குழு கூடும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.

ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அடுத்த அதிமுக பொதுக்குழு கூடும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 11ஆம் தேதி அன்று காலை 9.15 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவில் தலைமை மீதான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்று உத்தரவிட்டனர். 

அதேசமயம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் மாற்றுக்கருத்து இல்லை. மேல்முறையீடு செய்வது குறித்து தலைமை அறிவிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முதலில் தனது காரில் புறப்பட்டார். அதேபோல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சார வாகனத்தில் வானகரம் நோக்கி புறப்பட்டார். வழியில் தொண்டர்கள் மலர் தூவி வரவேற்ற நிலையில் இருவரின் காரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. 

https://tamil.abplive.com/news/politics/aiadmk-general-council-meeting-live-updates-june-23-eps-vs-ops-admk-issue-single-leadership-o-panneerselvam-edappadi-palanisamy-57757

இதனைத் தொடர்ந்து உடனடியாக மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முதலில் வந்தார். மேலும் கூட்டம் நடைபெறும் அரங்கினுள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த போது ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதேசமயம் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இபிஎஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி  கோஷங்களை எழுப்பிய வரும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்த முன்னாள் அமைச்சர்கள் முயற்சித்தனர்.

பொதுக்குழு கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் வந்த நிலையில், பொதுக்குழு கூடியது. அனைத்துத் தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசினார். அதைத் தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார். ''அனைத்துத் தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதால்,  ஒற்றைத் தலைமை வரவேண்டும். ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தோடு சேர்த்து எப்போது மீண்டும் பொதுக்குழு கூட்டப்படுகிறதோ, அப்போதுதான் ஏனைய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்''  என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்டார். ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அடுத்த அதிமுக பொதுக்குழு கூடும் என்று அறிவித்த அவர், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ஜூலை 11ஆம் தேதி அன்று காலை 9.15 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget