Lok Sabha Election 5th Phase LIVE : நாடு முழுவதும் 5ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்டத்தில், 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிகளின் வாக்குப்பதிவு தொடங்கியது. மும்பை வடக்கில் பியூஸ் கோயல், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
- நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 2வது கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசாவில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
- ஜார்க்கண்ட் மாநிலம் கண்டே சட்டசபை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
- ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. தற்போது வரை அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை.
-
ஈரான் அதிபருக்காக உலகம் முழுவதும் பல இடங்களில் பிரார்த்தனை நடந்து வருகிறது. இரவு முழுவதும் தேடலை முடுக்கிவிட Night Vision ஹெலிகாப்டர்களை அனுப்பி உள்ளது துருக்கி அரசாங்கம்.
மேலும், பிரதமரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈராக் மற்றும் அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் மீட்பு பணியில் இறங்கி உள்ளன. இதுவரை 40 மீட்பு குழுக்கள், 8 ஆம்புலன்ஸ்கள் ஹெலிகாப்டர் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் முகாமிட்டு தேடி வருகின்றனர். மேலும், செஞ்சிலுவை சங்கம் சம்பவ இடத்தில் மீட்பு பணியை தலைமையேற்று நடத்தி வருகிறது.
- சென்னையில் நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. ரூபே கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் 2024ன் நேற்றைய கடைசி லீக் போட்டியில் மோத இருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
நாடு முழுவதும் 5ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு - ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாடு முழுவதும் 49 தொகுதிகளில் நடைபெற்ற 5வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
Lok Sabha Election 5th Phase LIVE : ஈரான் அதிபர் மறைவு: இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட முடிவு
ஈரான் அதிபர் மறைவு இப்ராஹிம் ரைசி மறைவையொட்டி, நாளை இந்தியாவில் உள்ள அரசு கட்டடங்களில் உள்ள தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உதகையில் மலர் கண்காட்சி மே 26ம் தேதி வரை நீட்டிப்பு
உதகையில் மலர் கண்காட்சி வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE : 1 மணி வாக்குப்பதிவு நிலவரம் என்ன?
1 மணி நிலவரப்படி, 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் 36.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.