மேலும் அறிய
AIADMK: காஞ்சியில் கூடிய அதிமுகவினர்..! மாநாட்டுக்கு ஒத்திகையா ? அதிர்ந்த காஞ்சி மாநகரம்
Kanchipuram Admk : காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் பிரம்மாண்ட பேரணி மேற்கொண்டனர்.
மதுரை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் இருசக்கர வாகனம் பிரம்மாண்ட பேரணி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் அதிமுக பிரம்மாண்ட மாநாடு ( madurai admk manadu )
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்காக மதுரை வலையங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மாநாடு மேடை மற்றும் பந்தல் என பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்து அதிமுக சார்பில் பல்வேறு விதமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் (Kanchipuram Admk)
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் ஆட்டோ வாகனங்களில் மாநாடு அழைப்பு ஸ்டிக்கர் ஒட்டியும், முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகரப் பகுதியில் அதிமுக தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும், மதுரை மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில், காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து , இருசக்கர வாகன பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
இருசக்கர வாகன பேரணி (Bike rally)
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில், அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று அதிமுக தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் மாநாட்டிற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தபடி சென்றனர்.
இருசக்கர வாகன பேரணியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் கே பழனி எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் எஸ் எஸ் ஆர் சத்யா, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், ஒன்றிய,நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion