மேலும் அறிய

அதிமுக ஒற்றுமை பற்றி லீமா ரோஸ் மார்ட்டின் சொன்ன ஒரு வரி... அரசியலில் புதிய சிக்னலா.?

அதிமுகவில் விரைவில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் கோவையில் தெரிவித்தார்.

லீமா ரோஸ் மார்ட்டின், அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்றும் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்த திருச்சி லால்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு உறவினர்கள் மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லீமா ரோஸ் மார்ட்டின், தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தொகுதி வளர்ச்சியை முன்னிட்டு கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என கூறினார்.

அதேபோல், “சிங்கப்பெண்” திட்டத்தையும் தாம் வரவேற்பதாக தெரிவித்த அவர், மகளிர் குடும்பத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தொடர்ந்து ரூ.1,000 வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

தமிழக அரசின் நடவடிக்கைகளில் முக்கியமாக 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பது குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக கட்சியில் நிலவி வரும் உள்கட்சி பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைவரும் ஒரே அணியாக செயல்படுவார்கள்” என லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.

இந்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget