மேலும் அறிய
பிற கட்சிகள் மூக்கில் விரல் வைக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது - செல்லூர் ராஜூ
அழகிரி அ.தி.மு.க., அழிந்துவிடும் என தெரிவித்தார். ஆனால் அதற்கு பின் இரண்டு முறை ஆட்சிக் கட்டில் அமர்ந்தது அ.தி.மு.க., அதைப்போல் தான் தி.மு.க நினைப்பது பொய்யாகும்.

அதிமுக ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை சிம்மக்கல் அருகே நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ "நீர் பூத்த நெருப்பை போல அ.தி.மு.க., இயக்கம் துவங்கப்பட்டது. அப்படியான நெருக்கடியில் தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., இயக்கத்தை துவக்கினார். இயக்கத்தை அழித்துவிடலாம் என கலைஞர் கருணாநிதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது பகல் கனவாக தான் முடிந்தது. அந்த அளவிற்கு அரஜகத்தோடும் ரவுடித்தனத்தோடும் விரோத சக்திகள் செயல்பட்டனர்.

ஆனால் இதெற்கெல்லாம் எதிராக உயிர்பெற்று மக்கள் இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது. அண்ணா வழியில் புரட்சித்தலைவர் கழகத்தை வழிநடத்தி கொண்டு வந்துள்ளார். பிற மாநிலங்களின் அரசியல் கட்சிகள் மூக்கில் விரல் வைக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. அப்படி வரலாறு பேசும் கட்சி தான் அதிமுக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு மக்கள் திட்டங்களை கொண்டு வந்தனர். அந்த வழியில் 7.5% மருத்துவ இட ஒதுக்கீட்டை ஈ.பி.எஸ்., கொண்டு வந்தார். அதே போல் ஜல்லிக்கட்டு தடையை நீக்கி ஓ.பி.எஸ்., தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்தி ஜல்லிக்கட்டு நாயகனாக திகழ்கிறார். ஆனால் தி.மு.க., ஆட்சியில் வெளுத்து வாங்கும் இந்த வெயிலை போல் மக்களை வாட்டி வதைக்கிறது.

அ.தி.மு.க அரசு நெருக்கடியை சந்திப்பது புதிதல்ல எதையும் சந்திப்போம். அடக்கு முறைகளை செய்து வெற்றி பெறலாம் என நினைக்க வேண்டாம். பகல் கனவு பழிக்காததற்கு உங்க அப்பா கருணாநிதி தான் சாட்சி. தி.மு.க.,வை 10 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியதை மறக்க வேண்டாம். 2016ஆம் ஆண்டு யாருடைய உதவியும் இல்லாமல் வெற்றி பெற்றது அ.தி.மு.க., அதையும் மறக்க வேண்டாம். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என கணக்கு போட்டீர்கள், ஜோதிடம் சொன்னீர்கள். ஆனால் ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். கொரோனா காலகட்டத்தில் மக்களை காப்பாற்றிய ஆட்சி தான் அ.தி.மு.க ஆட்சி. அந்த சமயத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செய்தோம். ஆட்சிக்கு வெளியில் இருந்து வாய் பேசிய ஸ்டாலின் ஆட்சிக்கட்டில் அமர்ந்த உடன் எதையும் செய்யவில்லை.

அ.தி.மு.க அடிக்க அடிக்க எழும். நாங்கள் பனங்காட்டு நரி எதற்கும் அஞ்சமாட்டோம். அ.தி.மு.க., தி.மு.க.,வில் இணையும் என ஆறுடம் சொல்கிறார் தற்போதைய அமைச்சர் ஒருவர். அது ஒரு போதும் நடக்காது. இது ஜனநாயக இயக்கம். அழகிரி அ.தி.மு.க., அழிந்துவிடும் என தெரிவித்தார். ஆனால் அதற்கு பின் இரண்டு முறை ஆட்சிக் கட்டில் அமர்ந்தது அ.தி.மு.க., அதைப்போல் தான் தி.மு.க நினைப்பது பொய்யாகும். தேர்ந்தல் முடிந்ததும் சோர்ந்துவிட்டோம் என நினைத்திருப்பார்கள். ஆனால் அ.தி.மு.க அப்படி இல்லை ஒரு போதும் சோர்ந்து போகாது, வீரி எழும். தி.மு.க., மக்களிடம் சொன்ன வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்" எனவும் எச்சரித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Neet exam | 'சிறப்பு மருத்துவ வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' - சிவகங்கை மாணவியின் கோரிக்கை என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement