மேலும் அறிய

AIADMK Opposition Leader: ஓபிஎஸ்-இபிஎஸ் யார் எதிர்க்கட்சி தலைவர்? இறுதி முடிவிற்கு இன்று வாய்ப்பு!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூடி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது.
 
திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும், புதிய அமைச்சர்களும் தங்களின் துறைசார்ந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இதுஓருபுறம் இருக்க இன்னும் தமிழக சட்டப்பேரவை எதிக்கட்சி தலைவர் யார் என்று முடிவு செய்யப்படவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் இந்த பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

AIADMK Opposition Leader: ஓபிஎஸ்-இபிஎஸ் யார் எதிர்க்கட்சி தலைவர்? இறுதி முடிவிற்கு இன்று வாய்ப்பு!

கடந்த 7ஆம் தேதி காலை திமுக ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து, அன்று இரவு அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக சென்னை ராயாப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டத்து. கூட்டத்தில், முதலில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. எப்போதும் அமைதியாக இருந்து கடைசியல் கருத்து சொல்லும் ஓபிஎஸ், இம்முறை ஆரம்பத்திலேயே அடித்து விளையாடத் துவங்கியுள்ளார். ‛‛நீங்க எடுத்த தவறான முடிவு தான்... கட்சி தோற்க காரணம்...’’ என, எடுத்த எடுப்பிலேயே இபிஎஸ்-யை நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவ்வளவு தான், இபிஎஸ்-யும் பதிலுக்கு பாய்ந்துள்ளார். 

AIADMK Opposition Leader: ஓபிஎஸ்-இபிஎஸ் யார் எதிர்க்கட்சி தலைவர்? இறுதி முடிவிற்கு இன்று வாய்ப்பு!

’’தமிழகம் முழுதும் செலவு பண்ணிருக்கேங்க... எவ்வளவு தேர்தல் வேலை பார்த்திருக்கேங்க...’’ என இபிஎஸ் கொதிக்க, ‛‛உங்க பணத்தையா செலவு பண்ணீங்க... கட்சிப்பணத்தை தானே செலவு பண்ணீங்க...’’ என, ஓபிஎஸ் கேட்க, இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஓபிஎஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‛‛கட்சிக்கு பண்ணதுதானாங்க... இல்லைன்னா இவ்வளவு ஜெயிச்சிருக்க முடியுமா...?’’ என, இபிஎஸ் கேட்க, ‛‛என்ன ஜெயிச்சோம்... ஆட்சியை இழந்துட்டோமே...’’ என கூலாக கேட்டுள்ளார் ஓபிஎஸ். ‛‛கொங்கு மண்டலம் முழுதையும் முழுசா தூக்கியிருக்கோம்; என்னோட ஏரியா முழுதும் கட்சி ஜெயிச்சிருக்கு; உங்க ஏரியா நிலைமை என்ன?’’ என, இபிஎஸ் குண்டை போட்டுள்ளார். மேலும், இரு தரப்பினரும் காரசாரமாக விவாதித்தனர். ஆனால் எந்த முடிவும் எட்டபடவில்லை.  விவாதங்கள் நடைபெற்றன. அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க சூழல் உண்டாகவில்லை என்பதால், இந்த கூட்டம் வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திக்கவைப்பட்டுள்ளது” என்று கூறினார்.

AIADMK Opposition Leader: ஓபிஎஸ்-இபிஎஸ் யார் எதிர்க்கட்சி தலைவர்? இறுதி முடிவிற்கு இன்று வாய்ப்பு!

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய செய்ய அதிமுக இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் இறுதி முடிவு எடுக்க இன்று  மீண்டும் எம்எல்ஏக்கள் கூடுகின்றனர்.  சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.

இன்றாவது எதிர்கட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுவாரா? அது ஓபிஎஸ்-ஆக இருக்குமா? அல்லது இபிஎஸ்-ஆக இருக்குமா? இல்லை இருவரையும் தவிர்த்து புதிதாய் வேறு யாரேனும் தேர்வு செய்யப்படுகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வெயிலின் கொடூரம்! அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
வெயிலின் கொடூரம்! அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
Lok Sabha Election Second Phase LIVE : திரிபுரா, மணிப்பூரில் அதிகப்பட்ச வாக்குபதிவு!
Lok Sabha Election Second Phase LIVE : திரிபுரா, மணிப்பூரில் அதிகப்பட்ச வாக்குபதிவு!
Rathnam Movie Twitter Review: ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தாமிரபரணி விஷால் திரும்பினாரா? ரத்னம் ட்விட்டர் விமர்சனம்!
Rathnam Movie Twitter Review: ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தாமிரபரணி விஷால் திரும்பினாரா? ரத்னம் ட்விட்டர் விமர்சனம்!
Oru Nodi Review: சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Irfan View | மத வெறுப்பு சர்ச்சை கருத்து”பிரச்சனை என்கிட்ட இல்லடா பரதேசி..”இர்ஃபான் காட்டமான பதிலடிJairam Ramesh | ”மோடி என்றால் தேர்தல் ஆணையம் மிக மிக எச்சரிக்கையா இருக்கு”ஜெயராம் ரமேஷ் கடும் தாக்குIPL 2024 | SRH-ஐ அடிபணிய வைத்த RCB.. குதூகலத்தில் RCB FANSMadurai Chithirai Thiruvizha | பெண் பிள்ளைகள் பிறந்ததை கொண்டாடிய தந்தை ஒரு டன் தர்பூசணி தானம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெயிலின் கொடூரம்! அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
வெயிலின் கொடூரம்! அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்கும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
Lok Sabha Election Second Phase LIVE : திரிபுரா, மணிப்பூரில் அதிகப்பட்ச வாக்குபதிவு!
Lok Sabha Election Second Phase LIVE : திரிபுரா, மணிப்பூரில் அதிகப்பட்ச வாக்குபதிவு!
Rathnam Movie Twitter Review: ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தாமிரபரணி விஷால் திரும்பினாரா? ரத்னம் ட்விட்டர் விமர்சனம்!
Rathnam Movie Twitter Review: ஹரியின் விறுவிறு திரைக்கதையில் தாமிரபரணி விஷால் திரும்பினாரா? ரத்னம் ட்விட்டர் விமர்சனம்!
Oru Nodi Review: சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
சஸ்பென்ஸ் த்ரில்லர்.. கடைசி வரை ட்விஸ்ட்.. “ஒரு நொடி” படத்தின் விமர்சனம் இதோ!
Parvathy : அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிரா ஓட்டு போடுங்க.. பார்வதி வேண்டுகோள்..
அப்பாவி மக்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிரா ஓட்டு போடுங்க.. பார்வதி வேண்டுகோள்..
கிரிவலப்பாதையில்  தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய கலெக்டர் - தி.மலையில் நெகிழ்ச்சி
கிரிவலப்பாதையில் தூய்மை பணியாளர்களுடன் உணவருந்திய கலெக்டர் - தி.மலையில் நெகிழ்ச்சி
ITR 2024: உங்களோட இந்த வருமானத்திற்கு எல்லாம் வரி கிடையாது..! இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுகோங்க..
ITR 2024: உங்களோட இந்த வருமானத்திற்கு எல்லாம் வரி கிடையாது..! இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுகோங்க..
Vidya Balan:“ஒரு நாளைக்கு 3 சிகரெட்.. புகை பிடிக்க ரொம்ப பிடிக்கும்”  : நடிகை வித்யா பாலன் பேச்சு
“ஒரு நாளைக்கு 3 சிகரெட்.. புகை பிடிக்க ரொம்ப பிடிக்கும்” : நடிகை வித்யா பாலன் பேச்சு
Embed widget