‛யாரை நம்பியும் அதிமுக இல்லை....’ முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சீண்டல் பேச்சு!
அதிமுக யாரையும் நம்பி இல்லை. 32 ஆண்டுகள் அதிமுக ஆட்சி புரிந்து உள்ள நிலையில் திமுகவின் 100 நாட்கள் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துக் கூறினாலே உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பிடிக்கும்.
அதிமுக யாரையும் நம்பி இல்லை தமிழகத்தில் 32 ஆண்டுகள் அதிமுக ஆட்சி புரிந்து உள்ள நிலையில் திமுகவின் 100 நாட்கள் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துக் கூறினாலே உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பிடிக்கும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Omanthurar Hospital: மீண்டும் பதிக்கப்பட்ட கல்வெட்டு! உதயமாகிறதா புதிய தலைமைச் செயலகம்?
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான நிர்வாகிகள் அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம், ஓ.எஸ் மணியன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆளும் அரசாக திமுக உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் ஞாயம், தர்மம் எதிர்பார்க்க முடியாது எனவும் நியாய தர்மத்திற்கு எதிரான அரசு திமுக என்று விமர்சித்தார்.
Stalin on NEET Incident: நீட்டை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன்!முதல்வர் வெளியிட்ட வீடியோ
இதனை தொடர்ந்து பேசிய சிவி சண்முகம், ‛‛ திமுகவை ஏன் ஆட்சியில் அமர வைத்தோம் என மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் வருந்தி வருகின்றனர். திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின். திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வு விலக்கு தான் முதல் கையொப்பமாக இருக்கும் என கூறி மாணவர்களையும் மக்களையும் ஏமாற்றி விட்டனர்.
Gold Loan Waiver: தமிழ்நாட்டில் யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி?
அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் 6 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சி காலத்தில் 5 சவரன் நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் யாரையும் நம்பி இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களால் 32 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இயக்கம். திமுக அரசு நடவடிக்கைகளை 100 நாட்களின் செயல்பாடுகளை பொது மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும் அதிமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிக வெற்றி கிடைக்கும்,’’ என்று தெரிவித்தார்.
Jayakumar Pressmeet: ”சேப்பாக்கம் சேகுவேராவ காணோமே” - உதயநிதியை கலாய்த்த ஜெயக்குமார்